» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல்: பெண் உட்பட 3பேர் கைது!
செவ்வாய் 21, மார்ச் 2023 8:28:04 PM (IST)

பள்ளிக் கூடத்திற்குள் புகுந்து ஆசிரியரை ஓட ஓட விரட்டி தாக்கிய சம்பவத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த ராஜசிங்கம் மகன் பாரத் (38) என்பவர் எட்டையாபுரம் காவல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழநம்பிபுரம் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று பாரத் அப்பள்ளியில் இரண்டாம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது அந்த வகுப்பில் படிக்கும் ஒரு மாணவர் பாடத்தை கவனிக்காமல் பின்னால் இருந்தவரை ஆசிரியர் பாரத் அந்த மாணவனை முன்னாள் வந்து உட்காரும்படி கூறியுள்ளார்.
இதனையடுத்து அந்த மாணவர் முன்னாள் வரும் போது தவறி கீழே விழுந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து நேற்றைய தினமே அந்த மாணவனின் பாட்டியானா கீழநம்பிபுரம் பகுதியைச் சேர்ந்த முனியசாமி (53) என்பவரது மனைவி மாரிசெல்வி என்பவர் ஆசிரியர் பாரத்தை சத்தம் போட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று மதியம் ஆசிரியர் பாரத் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது அங்கு வந்த மேற்படி 2ம் வகுப்பு மாணவனின் தந்தை ஓட்டப்பிடாரம் தெற்கு கல்மேடு பகுதியைச் சேர்ந்த (தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் வசித்து வரும்) முனியசாமி மகன் சிவலிங்கம் (34), தாய் செல்வி (28) மற்றும் தாத்தா முனியசாமி (53), முனியசாமியின் பாட்டி மாரிச்செல்வி ஆகியோர் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து ஆசிரியர் பாரத்தை தவறாக பேசி, பள்ளி வளாகத்திற்குள் ஆசிரியரை ஓட ஓட விரட்டி கை மற்றும் கம்பால் தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியர் பாரத் அளித்த புகாரின் பேரில் எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் எட்டையாபுரம் போலீசார் உடனடியாக விசாரணை மேற்கொண்டு பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து ஆசிரியரை தாக்கியவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிவலிங்கம், செல்வி மற்றும் முனியசாமி ஆகியோர் 3 பேரையும் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து எட்டையாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
KumarMar 22, 2023 - 11:41:57 AM | Posted IP 162.1*****
இது போல சொந்தங்கள் இருந்தால் மாணவ சமூதாயம் உருப்பட்டமாதிரிதான்
மேலும் தொடரும் செய்திகள்

கடலோர கிராம பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்!!
செவ்வாய் 30, மே 2023 9:08:02 PM (IST)

வட மாநிலதொழிலாளர்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு
செவ்வாய் 30, மே 2023 9:01:40 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் 32 ஏக்கர் பரப்பளவில் பல்லுயிர் பூங்கா
செவ்வாய் 30, மே 2023 7:59:19 PM (IST)

வருவாய்த்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 30, மே 2023 7:46:16 PM (IST)

தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!
செவ்வாய் 30, மே 2023 5:36:50 PM (IST)

மணிமேகலை விருதுபெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 30, மே 2023 4:27:42 PM (IST)

எனக்குMar 22, 2023 - 10:48:31 PM | Posted IP 162.1*****