» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திமுக இளைஞர் அணி மண்டல பொறுப்பாளராக தூத்துக்குடி எஸ்.ஜோயல் நியமனம்..!

செவ்வாய் 3, ஜனவரி 2023 4:22:22 PM (IST)

மும்பை, கர்நாடகா, அந்தமான் மற்றும் சென்னை மண்டல திமுக இளைஞர் அணி பொறுப்பாளராக தூத்துக்குடி எஸ்.ஜோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக தலைமைக்கழகத்தால் இளைஞர் அணி செயலாளராக மீண்டும் உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். இளைஞர் அணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் மாநிலம் முழுவதும் இளைஞர் அணியை வலுப்படுத்திடுவதுடன், இளைஞர் அணிக்கு அதிகளவில் உறுப்பினர்களை சேர்த்திடும் பொருட்டு அதற்கான செயல்திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், இளைஞர் அணி பணிகளை திறம்பட ஒருங்கிணைக்கும் வகையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஒப்புதல் பெற்று தமிழகத்தில் 72 திமுக மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரி-காரைக்கால், மும்பை, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, அந்தமான்  உள்ளிட்ட மாநிலங்கள் 9 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் இளைஞர் அணி துணைச்செயலாளர் ஒருவர் மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதியதாக நியமிக்கப்பட்டுள்ள மண்டல பொறுப்பாளர்களுக்கு மாவட்ட செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் உள்ளிட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கிடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவினை திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

இந்தவகையில், சென்னை கிழக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை வடக்கு, சென்னை மேற்கு, சென்னை தெற்கு, சென்னை தென்மேற்கு  என 6 மாவட்டங்கள் மற்றும் மும்பை, கர்நாடகா, அந்தமான், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்குரிய மண்டல பொறுப்பாளராக தூத்துக்குடி எஸ்.ஜோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்தவரிசையில், ப.அப்துல்மாலிக், க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், கே.இ.பிரகாஷ், சி.ஆனந்தகுமார், நா.இளையராஜா, கு.பி.ராஜா என்ற பிரதீப்ராஜா, ந.இரகுபதி என்ற இன்பா ஏ.என்.ரகு ஆகியோர் இதர மண்டலங்களின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory