» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பூர்வீக சொத்தை அடுத்தவர் பெயருக்கு மாற்றிய வருவாய் துறை : விவசாயி வேதனை
செவ்வாய் 27, டிசம்பர் 2022 4:25:10 PM (IST)

ஸ்ரீவைகுண்டத்தில் பூர்வீக சொத்தை அடுத்தவர் பெயருக்கு மாற்றிய வருவாய் துறையினரால் பாதிக்கப்பட்ட விவசாயி 9 வருடம் நடையாய் நடந்தும் பலனில்லாமல் வேதனை அடைந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லகுளம் கீழத்தெருவை சேர்ந்தவர் தங்கபெருமாள்(80). இவர்களுக்கு பூர்வீகமான சொத்து வல்லகுளத்தில் உள்ளது. இந்த சொத்து மூன்று தலைமுறையாக தங்கபெருமாள் குடும்பத்தினர் அனுபவித்து வருகிறார்கள். வங்கி கடனுக்காக அடமானமும் வைப்பதும், திருப்புவதுமாக இருந்துள்ளார்களே தவிர வேறு யாருக்கும் சொத்தை விற்கவில்லை. இதற்கிடையில் 31.07.2013 ல் தங்கபெருமாள், தன்னுடைய தம்பிகள் சௌந்திரபாண்டி, கணேசன் ஆகியோருடன் சொத்தை பிரித்து கொண்டார்.
இதற்காக ஸ்ரீவைகுண்டம் சப் ரிஜிஸ்ட்டர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்தனர். இந்த காலகட்டத்தில் இவரகளது கூட்டு பட்டாவில் அனுபவித்து வரும் முத்தையா நாடாரும் தனது பங்கு சொத்தை கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு விற்று விட்டார். ஆகவே இருபிரிவினர் பெயரில் கூட்டுபட்டா ஏற்றவேண்டும் என்று இரு பிரிவினரும் மனு செய்தனர். ஸ்ரீவைகுண்டம் தாலூகா அலுவலகத்தில் தங்கபெருமாளுக்கு போதிய டாக்குமெண்ட இல்லை என்று கடந்த 9 வருட காலமாக அலைகழித்து வந்தனர். ஆனாலும் இவர் விடாமல் அலைந்து வந்தார்.
சுமார் 11 தடவை அவர்கள் கேட்ட ஆவணங்களையெல்லாம் கொண்டு போய் கொடுத்தார். இதற்காக தொடர்ந்து இணையவழி மூலமாக மனுசெய்து வந்தார். மனுவை அதிகாரிகள் தொடர்டந்து தள்ளுபடி செய்தே வந்தனர். கடந்த 3.06.2021 ல் நடந்த சமாபந்தியில் மனு கொடுத்தார். அப்போது மூன்று சகோதரர்களில் சௌந்திரபாண்டி பெயரில் மட்டும் கூட்டு பட்டாவில் சேர்த்துவிட்டனர். ஆனால் மற்ற இரண்டு பேர் பெயரும் சேர்க்கவில்லை. ஆனாலும் விவசாயி தங்கபெருமாள் முயற்சியை கை விட வில்லை.
இறுதியாக 24.10.2022 அன்று இணையவழி மூலமாக மனு செய்தார். அப்போது அவர்கள் கேட்ட தகவல்கள் எல்லாவற்றையும் தங்கபெருமாள் பட்டா தாசில்தாரிடம் நேரில் கொண்டு கொடுத்தார். எல்லாம் சரியாக இருக்கிறது என்று கூறிய அதிகாரி இறுதியில் மூல பத்திரம் இல்லை என மனுவை தள்ளுபடிசெய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்தார் தங்கபெருமாள். அண்ணன் தம்பி மூன்று பேர் ஒரே நேரத்தில் பத்திரம் பதிவு செய்யும் போது, ஒருவருக்கு மட்டும் கூட்டு பட்டாவில் சேர்த்த வருவாய் துறையினர் மற்ற இருவருக்கும் மூல பத்திரம் இல்லை என்று கூறியதால் அதிகாரிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது.
எனவே தகவல் உரிமை சட்டத்தின் கீழ் அவர் மனுசெய்தார். அந்த மனுவிற்கு வந்த பதில் அவரை அதிர்ச்சி அடைய வைத்தது. கடந்த 20.02.2018 வரை தங்க பெருமாளின் தகப்பனார் பாலையாநாடார் முத்தையா நாடார் ஆகிய இருவர் பெயரில் கூட்டுபட்டாவாக இருந்த பட்டா அதன் பின் இருவர் பெயரையும் நீக்கி விட்டு கேரளாவை சேர்ந்த சுபாஷ்கோபி என்ற பெயரில் மாற்றப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தார்.
இவர்கள் செய்த தவறை மறைக்க தனது மனுவை மூல பத்திரம் இல்லை என்று தள்ளுபடி செய்திருக்கிறார்கள். தனது சொத்தில் தன் தந்தை பெயரை நீக்கியதோடு மட்டுமல்லாமல் தன்னை திசை திருப்ப மூலபத்திரம் இல்லை என பொய்யான தகவலை கொடுத்து செயல்பட்ட பட்டா தாசில்தாரின் செயல் பாமர மக்களுகளின் அடிப்படை உரிமையை பறிப்பதாகவே இருக்கிறது.
ஏற்கனவே இருதயநோயால் பாதிக்கப்பட்ட விவசாயி தங்க பெருமாள் இது குறித்து மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனுகொடுத்துள்ளார். மாவட்ட ஆட்சி தவலைர் இந்த பிரச்சனையில் நேரில் தலையிட்டு விவசாயிகளை திசை திருப்பி விட்டு அலைய வைக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பார்தங்கள் பூர்வீக சொத்தை தனது பெயரிலும் தனது தம்பிபெயரில் கூட்டு பட்டாவில் சேர்த்து தருவார் என நம்பிக்கையுடன் இருக்கிறார் தங்கபெருமாள்.
மக்கள் கருத்து
ANNADURAI MDec 29, 2022 - 06:28:29 AM | Posted IP 162.1*****
ஐயா வணக்கம். இரண்டு திருமணம் செய்த எனது தாத்தா. முதல் மனைவியின் மகன் பெயரில். சொத்துக்களையும்.1953 ஆம் ஆண்டு முதல். வருவாய் துறை ஆவணங்களில்எனது தாத்தா. தனது முதல் மனைவியின் மகன் பெயரில். வருவாய் துறை ஆவணங்களில். முதல் மனைவியின் மகன் பெயருக்கு. பட்டா ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிறகு எனது தாத்தா1956ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அதன் பிறகு.1987 ஆம் ஆண்டு. இரண்டாவது மனைவியின் மகன்கள்.UDRபட்டா பெற்றுக்கொண்டு அனுபவம் செய்து அந்த சொத்தை விநியோகம் செய்து உள்ளார்கள். ஆனால் இரண்டாவது மனைவியின் மகன்கள் வருவாய் துறை ஆவணங்களில்யுடிஆர் க்கு முன். இரண்டாவது மனைவியின் மகன்கள் பெயர். பதிவாகவில்லை. இப்போது இது சம்பந்தமவருவாய் துறையில் மனு கொடுத்து விசாரணை நிலுவையில் உள்ளது. மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது இது யாருக்கு. சாதகமாக அமையும் என்பதை ஒரு வீடியோவாக வெளியிடும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் முதல் மனைவி உயிரோடு இருக்கும்போதே எனது தாத்தா 2வது திருமணம் செய்துள்ளார் எனது தாத்தா பெயரில் உள்ள சொத்துகள் அனைத்தையும் பூர்வீகச் சொத்துக்கள். ஆனால் எனது இது முதல் மனைவியின் மகன் பெயரில் ஆயிரத்து 952 ஆம் ஆண்டு முதல் பட்டா மாற்றம் செய்து கொடுத்துள்ளார்.
ANNADURAI MDec 29, 2022 - 06:25:48 AM | Posted IP 162.1*****
எனது மனு எண்.2022/9005/17/396097/0802 இந்த மனு ஆன்லைன் மூலமாக. சர்வே மற்றும் செட்டில்மெண்ட் துறை அதிகாரி அவர்களுக்கு. மனு கொடுக்கப்பட்டது இந்த மனு சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்பூங்கோதை மேடம் அவர்கள். மனுதாரர். கொடுத்த மனுவிற்கு. பதில் வழங்கவில்லை. கேட்காத கேள்விக்கு பதில் வழங்கியுள்ளார் இதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது. மனுதாரரின் கோரிக்கை இரண்டே கேள்வி.2017 ஆம் ஆண்டு. சர்வே எண்.481/1Aஇந்த சர்வே எண்ணில். போலியாக. கதிரவன். மற்றும். செங்கமுத்து. பெயர்களை. பட்டா எண்.1562 தில். சேர்த்துள்ளார்கள். இது சம்பந்தமாக மனு கொடுக்கப்பட்டு டிஆர்ஓ ஆர்டிஓ. இவர்கள் முன்னிலையில். மனுதாரர். மற்றும். எதிர்மனுதாரர். விசாரணை முடிந்தது. பிறகு.RDO அமர்நாத் அவர்கள் மேற்கண்ட சர்வே எண்கள் நீதிமன்றத்தில் வழக்கில் உள்ளதால். செங்கமுத்து. மற்றும். . பெயர்களை. நீக்கம் செய்ய. இயலாது. என்று. ஆணை பிறப்பித்துள்ளார். மற்றும். உயர்திரு. மாவட்ட நீதிபதி . மேற்கண்ட. சர்வே எண்.481/1A எயில். நீதிமன்ற வழக்கு பதியப்படவில்லை. . மாவட்ட முதன்மை. நீதி அரசர். ஆதாரப்பூர்வமாக தகவல் கொடுத்துள்ளார். மேற்கண்ட. அனைத்து. செயல்பாடுகளும். பூங்கோதை மேடத்திற்கு.P(A)g அவர்களுக்கு தெரியும். மேல்படி. இதில். யார். குற்றவாளி.? என்பதை கண்டுபிடித்து. மேற்கண்ட போலியான நபர்களை. பட்டாவில் இருந்து. பெயர் நீக்கம் செய்ய வேண்டும். என்பதை
ANNADURAI MDec 29, 2022 - 06:23:27 AM | Posted IP 162.1*****
உயர்திரு தமிழ்நாடு முதலமைச்சர். அவர்களுக்கு அண்ணாதுரை வணக்கத்துடன் எழுதிக் கொண்டது என்னவென்றால். எனது மகள் ஏ சுவாதி திருமணம். தட்டனூர் குடிக்காடு கிராமத்தில் தெற்கு தெருவில் அமைந்திருக்கும் விநாயகர் கோவிலில்.09/09/2022 தேதி. காலை.10.30 மணிக்கு திருமணம் நடைபெற்றது. ஆகையால். எங்கள் குடும்பத்தில் நாங்கள் தினக்கூலி வேலை செய்து கொண்டிருக்கிறோம் ஆகையால். நாங்கள். கடன் வாங்கி திருமணம் செய்து கொண்டு உள்ளோம். ஆகையால் உயர்திரு தமிழ்நாடு முதலமைச்சர். நிவாரண நிதியில் இருந்தும். மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் அறக்கட்டளை நிதியிலிருந்தும். தங்கள் மகள் போல் நினைத்து எனக்கு நிதி உதவி வழங்கும்படி. மிகத் தாழ்மையுடன். தங்கள் பாதங்களைத் தொட்டு வணங்கி வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
ANNADU.RAI MDec 29, 2022 - 06:19:02 AM | Posted IP 162.1*****
Parts patition 2011 1station to Tha but not ACtion revs Set Ariyalur sir
SVK SIMHANDec 28, 2022 - 09:07:39 PM | Posted IP 162.1*****
Theft never disposed still theives died.
G கோவிந்தராஜ்Dec 28, 2022 - 04:10:51 PM | Posted IP 162.1*****
இது போன்று தமிழகம் முழுவதும் நடக்கின்றன அதிகாரிகள் முறையாக நடந்து கொள்ள வேண்டும்
C.R.SundaravelDec 28, 2022 - 09:28:28 AM | Posted IP 162.1*****
இதுபோலத்தான் 120 வருடங்களாக உள்ள எங்கள்வீட்டிற்கு பட்டாவை நிலுவை என்று வைத்து பட்டகொடுக்காமல் சாக்கு போக்கு சொல்கிறார்கள் லட்சக்கணக்கில் பட்டவுக்கு பணம் கேட்கிறார்கள்
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)











T. RameshDec 29, 2022 - 07:52:56 AM | Posted IP 162.1*****