» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி மாணவர்கள் மறியல்: தூத்துக்குடியில் பரபரப்பு

வியாழன் 1, டிசம்பர் 2022 3:36:15 PM (IST)

தூத்துக்குடியில் பஸ் வசதி கேட்டு ஊழியர்கள் -மாணவர்கள் கனநீர் ஆலை முன்பு ‘திடீர்' சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் மத்திய அரசின் அணுசக்தி துறைக்கு சொந்தமான கனநீர் ஆலை மற்றும் ஊழியர்களுக்கான குடியிருப்பு உள்ளது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கனநீர் குடியிருப்பு ஊழியர்களின் ஆலை குழந்தைகள் படிப்பதற்காக பழையகாயல் புல்லாவழி பகுதியில் ஒரு பள்ளி கட்டப்பட்டது. இதையடுத்து முத்தையாபுரம் குடியிருப்பில் இருந்து புல்லாவழிக்கு மாணவ- மாணவிகளை சார்பில் பஸ் மூலம் தினமும் அழைத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் பெற்றோர்கள் இனி தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்து பின்னர் மீண்டும் அழைத்து செல்ல வேண்டும் எனவும், பள்ளி சார்பில் பஸ் இயக்கப்படாது என கூறப்பட்டதாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கனநீர் ஆலை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் இன்று காலை கனநீர் ஆலை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், வழக்கம் போலவே தினமும் பள்ளி சார்பில் பஸ் மூலம் மாணவ- மாணவிகளை அழைத்து செல்ல வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory