» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி அரசு துறை சார்ந்த வணிகத்தில் ஈடுபட ஆர்பிஐ அங்கீகாரம்!

புதன் 30, நவம்பர் 2022 10:23:14 PM (IST)

இந்திய ரிசர்வ் வங்கி சார்பாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியினை அரசு துறை சார்ந்த வணிகத்தில் ஈடுபட அங்கீகாரம் அளித்துள்ளது.

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியினை அரசு துறை சார்ந்த வணிகத்தை மேற்கொள்ளுதலுக்கான முகவர் வங்கியாக நிர்ணயித்தற்கான ஒப்பந்தம் பாரதிய ரிசர்வ் வங்கியுடன் மும்பையில் ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட் (TMB), ஒரு தலைசிறந்த ஷெட்யூல்டு கமர்சியல் வங்கி. பங்கு சந்தைகளில் தனது பங்கினை பட்டியலிட்டதை அடுத்து, மேலும் தனது தொலை நோக்கு பார்வையாக, இந்தியா முழுவதுமான விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது பாரதிய ரிசர்வ் வங்கி அரசு துறை சார்ந்த வணிகத்தை மேற்கோள்ளும் ஒரு முகவர் வங்கியாக அங்கீகாரம் அளித்துள்ளது.

இதுகுறித்து வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவையிலும், அதன் கோட்பாடுகள் மற்றும் வரைமுறைகளிலும் போற்றுதலுக்கு உரிய சரித்திரம் படைத்து வருகிறது. தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது.

இந்த வங்கி இந்தியா முழுவதும் 16 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 509 கிளைகள், 12 மண்டல அலுவலகங்களின் மூலம் சுமார் 50 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவையாற்றி வருகிறது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பங்குசந்தையிலும் பட்டியலிடப்பட்டு உள்ளது. அதன்பிறகு வங்கி மீண்டும் தனது தொலைநோக்கு திட்டமாக, நாடு முழுவதும் மீண்டும் விரிவாக்க நடவடிக்கைகளிலும், அதன் சேவை திட்டங்களிலும் புதிய பரிமாணங்களை மேற்கொண்டு வருகிறது.

தற்போது பாரத ரிசர்வ் வங்கி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியை அரசு துறை சார்ந்த வணிக நடவடிக்கைகளை கையாளுவதற்கான முகவர் வங்கியாக அங்கீகாரம் அளித்துள்ளது. இதனை வங்கியின் அனைத்துநிலை உடைமைதாரர்களுக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.வங்கியினைப் பற்றி மேலும் விபரங்களை www.tmb.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்"  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். .


மக்கள் கருத்து

D. Soundara pandianDec 1, 2022 - 11:08:23 AM | Posted IP 162.1*****

ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காகவும் சிறு குறு வணிகர்களின் ஆகச் சிறந் வங்கியாகவும் நூற்றாண்டு கடந்த சேவைக்கு மற்றும் ஒரு மணிமகுடம் இந்த அங்கீகாரம். வாழ்த்துக்கள் அனைவருக்கும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory