» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாயமான மாணவிகளை மீட்க நடவடிக்கை : டி.ஐ.ஜி. அலுவலகத்தில் பெற்றோர் புகார்

புதன் 30, நவம்பர் 2022 11:51:30 AM (IST)

சாத்தான்குளத்தில் மாயமான கல்லூரி மாணவிகள் இருவரை மீட்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அச்சுதன். இவரது மனைவி லதா. இவர்களது மகள் கார்த்திகா (19).இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். சாத்தான்குளம் அருகே உள்ள கொழுந்தட்டு கிராமத்தை சேர்ந்தவர் எப்சிபா செல்வகுமாரி (21). இவரும் அதே கல்லூரியில் படித்து வருகிறார். தோழிகளான இவர்கள் இருவரும் கடந்த 23-ந் தேதி வங்கிக்கு செல்வதாக கூறிசென்றனர்.

பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவர்கள் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோர் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தனர். இந்நிலையில் மாணவி கார்த்திகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று நெல்லை டி.ஐ.ஜி.அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில், சாத்தான்குளம் போலீசில் மாணவிகள் மாயம் குறித்து புகார் செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாணவிகளை உடனடியாக மீட்டுதர வேண்டும் என கூறியிருந்தனர்.

தொடர்ந்து மாணவியின் சகோதரர் நிருபர்களிடம் கூறுகையில், கல்லூரியில் தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. சம்பவத்தன்று மாணவிகள் இருவரும் மாயமாகி உள்ளனர். இதுதொடர்பாக சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தோம். ஆனால் மாயமாகி ஒருவாரம் ஆன நிலையிலும் போலீசார் சரிவர விசாரிக்காமலும் காலதாமதம் செய்கின்றனர். மாயமான மாணவிகளை உடனடியாக மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


மக்கள் கருத்து

எல்லாம்Dec 1, 2022 - 09:32:30 AM | Posted IP 162.1*****

காம வெறியாதான் இருக்கும்... கேட்டா புனித காதல்னு சொல்லுவாளுங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory