» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நீச்சல் போட்டியில் 8 பதக்கங்கள் வென்ற ரயில்வே ஊழியருக்கு பாராட்டு

செவ்வாய் 29, நவம்பர் 2022 4:56:51 PM (IST)தேசிய அளவில் ரயில்வேகளுக்கு இடையான நீச்சல் போட்டியில் குரும்பூர் ரயில் நிலைய அலுவலர் 8 பதக்கங்கள் வென்று வென்று சாதனை புரிந்துள்ளார். . 

இந்திய ரயில்வேயில் 17 ரயில்வே மண்டலங்கள் இணைந்துள்ளன. தேசிய அளவில் ரயில்வேகளுக்கு இடையான நீச்சல் போட்டி நவம்பர் மாதம் முதல் வாரத்தில் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் மதுரை கோட்டத்தை சேர்ந்த திருநெல்வேலி - திருச்செந்தூர் பிரிவில் உள்ள குரும்பூர் ரயில் நிலைய பயண சீட்டு அலுவலர் எமில் ராபின் சிங் 8 பதக்கங்கள் வென்றுள்ளார். 

நான்கு தங்க பதக்கங்கள், இரண்டு வெள்ளி பதக்கங்கள், இரண்டு வெண்கல பதக்கங்கள் வென்று சாதனை புரிந்துள்ளார். இவரது சாதனையை அறிந்த மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் அவரை அழைத்து பாராட்டி மகிழ்ந்தார். அவருடன் முது நிலைக் கோட்ட வர்த்தக மேலாளர் ரதிப்பிரியா, கோட்ட ஊழியர் நல அதிகாரி டி. சங்கரன், உதவி ஊழியர் நல அதிகாரி எம். இசக்கி ஆகியோரும் பாராட்டு தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

P.S. RajNov 30, 2022 - 10:54:54 PM | Posted IP 162.1*****

வாழ்த்துக்கள்! சதர்ன் ரெயில்வே ஜெனரல் மேனேஜர் (GM of SR) ஏதேனும் வாழ்த்து சொல்லவில்லையா!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory