» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை: பெண் உட்பட 2பேர் கைது!

செவ்வாய் 29, நவம்பர் 2022 11:40:28 AM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி நகர காவல் துணை கண்காணிப்பாளர்சத்தியராஜ் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் உதவி ஆய்வாளர் முனியசாமி மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, லூர்தம்மாள்புரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

இதில், தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த நாகூர் ஹனிபா மனைவி பாத்திமா (எ) லைலா (47) மற்றும் அவரது மகன் யாசர் அராபத் (26)  ஆகிய 2 பேர் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 45 கிராம் கஞ்சா மற்றும் ஒரு செல்போனையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட பாத்திமா (எ) லைலா மீது ஏற்கனவே தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் 12 கஞ்சா  வழக்குகளும், யாசர் அராபத் மீது கஞ்சா உட்பட 10 வழக்குகளும்.


மக்கள் கருத்து

V.MohanNov 29, 2022 - 01:30:41 PM | Posted IP 162.1*****

Sattam sariyilla..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory