» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அறியப்படாத தியாகிகள் நூல் வெளியீட்டு விழா
திங்கள் 15, ஆகஸ்ட் 2022 8:54:16 PM (IST)

75 ஆம் ஆண்டு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய நூல் "தூத்துக்குடி மாவட்ட அறியப்படாத தியாகிகள்” மாவட்ட ஆட்சி தலைவர் கி. செந்தில்ராஜ் வெளியிட்டார்.
தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்ற 75 வது ஆண்டு சுதந்திர தினவிழாவில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய "தூத்துக்குடி மாவட்ட அறியப்படாத தியாகிகள்” என்ற நூலை மாவட்ட ஆட்சி தலைவர் கி. செந்தில்ராஜ் வெளியிட்டார். மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் லோக பாலாஜி சரவணன் பெற்றுக்கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், உதவி ஆட்சியர் சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட பலர் இருந்தனர்.
இந்த நூலில் தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திரத்தின் போது நடந்த முக்கிய நிகழ்வுகள் பதிவிடப்பட்டுள்ளது. மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷ் துரையை வாஞ்சி நாதன் சுட்டு கொன்ற சம்பவம். கோவில்பட்டி அருகே உள்ள கடலையூரில் உள்ள சுந்திரபோராட்ட வீரர்கள் நினைவுத் தூண், திருச்செந்தூரில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான நினைவு தூண், தூத்துக்குடி, ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்த போரட்ட வீரர்கள், குலசேகரபட்டினம் லோன் துரை கொலை வழக்கு உள்பட பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் தொகுக்கப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட வீரர்கள் குரும்பூர் ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்தியது, சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனை தாக்கி துப்பாக்கியை தூக்கி செல்லுதல், மெஞ்ஞானபுரம் தபால் நிலையம் எரிப்பு, குரங்கணி மரம் வெட்டும் போராட்டம், கள்ளுக்கடையை எதிர்த்து கள்ளு குடித்தவர்களை மொட்டை அடித்து கழுதை மேல் ஏற்றும் சம்பவம் என பல்வேறு அறியப்படாத சம்பவங்களை எழுத்தாளர் இந்த நூலில் தொகுத்து உள்ளார். மாவட்ட நிர்வாகம் சார்பில் உருவாக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய வெப்சைட் மற்றும் வரலாறுகள் குறித்தும் இந்த நூலில் குறிக்கப்பட்டுள்ளது. 200 க்குமேற்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்படம். சம்பவங்கள் நடந்த இடங்கள் குறித்தும் இந்த நூலில் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










