» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை : மீனவர்கள் கோரிக்கை!

திங்கள் 25, அக்டோபர் 2021 3:31:22 PM (IST)



தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி திரேஸ்புரம் சிந்தாயாத்திரை சிறுதொழில் நண்டுவலை நல சங்கத்தினர் மனு அளித்தனர். 

தூத்துக்குடி திரேஸ்புரம் சிந்தாயாத்திரை சிறுதொழில் நண்டுகளை நல சங்க தலைவர் சூசை மைக்கேல், செயலாளர் ஆனந்த், பொருளாளர் ராஜேஷ்  ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கையொப்பமிட்டு மனு அளித்துள்ளனர். அதே போன்று நண்டு வலை தொழிலாளர் முன்னேற்ற கழகத் தலைவர் தனராஜ், செயலாளர் ராஜன், பொருளாளர் அலெக்ஸ் ஆகியோர் தலைமையில் அச்சங்கத்தை சார்ந்தவர்கள் இன்று மனு அளித்துள்ளனர். 

அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது "தூத்துக்குடியில் நாங்கள் தொழில் செய்து வருகிறோம். எங்களது வாழ்வாதாரம் மீன்பிடி தொழிலை சார்ந்துள்ளது. எங்கள் மக்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை ஸ்டெர்லைட் மூலமாக பெற்று வந்தோம். கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை மூடி இருப்பதால் எங்களது தொழில் சார்ந்த உதவிகள் கிடைப்பதில்லை. இந்த ஆலை மீண்டும் திறந்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்ய இருக்கிறார்கள் என்பதை நம்புகிறோம்.



எங்களது வாழ்வாதாரம் மேம்படவும், கல்வி கற்ற எங்கள் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்பதை கருத்தில் கொண்டும், எங்கள் சங்கத்தின் வாயிலாக இந்த ஆலையை திறக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் இந்த மனுவை அளிக்கிறோம் என்று கூறியுள்ளனர். இதே போன்று தெற்கு வீரபாண்டியபுரம், சில்வர்புரம் உள்ளிட்ட சில கிராம மக்களும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.


மக்கள் கருத்து

ராஜ்Oct 27, 2021 - 09:33:14 PM | Posted IP 162.1*****

இரத்தம் சிந்தி மீட்டெடுத்த தூத்துக்குடி மீண்டும் கறை படுத்தாதீர்...

சாமிOct 27, 2021 - 08:18:20 PM | Posted IP 162.1*****

Vella chattai cooling glass thambi yethavathu cinema la America mappilai vesathuku nadikka ponga

JothiramOct 27, 2021 - 08:14:50 PM | Posted IP 162.1*****

Dear All, I am Jothiram, please forgive me for my previous comments. I am a selfish sangi. Speaks lies and rubbish. I do not know anything about GDP, corporate just triying to learn but my selfish brain does not think about people. Please kaal la vilunthu kekuran manichirunga please....

JothiramOct 27, 2021 - 09:03:32 AM | Posted IP 108.1*****

காப்பர் வேண்டும்.. காப்பர் ஆலை வேண்டாம்.. விலைவாசி உயர்வு வேண்டாம்.. ஆனால் அதை நாமே உருவாக்குவோம்.. என்னங்க சார் உங்க சட்டம்....? ஸ்டெர்லைட் ‘ல வடநாட்டு காரங்கதான் வேலை பாக்குறாங்க’னு கெளப்பி விடுறது... போய் பாருங்க தெரியும்.. 100 க்கு 4 பேர் தான் வேற மாநிலமா இருப்பாங்க.. மொதல்ல ஏற்றுமதி/இறக்குமதி பத்தியும் உள்நாட்டு தயாரிப்புகள் பத்திய விழிப்புணர்வு இல்லாம பேசாதிங்க.. கார்பரேட் னாலே வில்லன் ரேஞ்சுக்கு buildup பண்றத நிப்பாட்டுங்க.. கருத்து பதியுறதுக்கு முன் GDP, Job opportunities, what is corporate பற்றிய கொஞ்சம் அறிவ வளத்துட்டு பண்ணுங்க..

சுரேஷ்Oct 26, 2021 - 03:30:28 PM | Posted IP 162.1*****

1000 கோடிக்கு மேல் சம்பாதித்து ஒரு லட்ச ரூபாயை மக்கள் நலனுக்காக செலவு செய்து விட்டு சுற்றுபுற சூழலை மாசுபடுத்தி, நாட்டுக்கு அவர்கள் நல்லது செய்து என்ன பயன்.? ஆலை வேண்டும் என்பவர்கள், ஆலைக்கு அருகில் பாதிக்கப்பட்ட மக்களை சற்று யோசியுங்கள். உங்கள் வீட்டில் ஸ்டெர்லைட்டினால் இழப்பு ஏற்பட்டிருக்குமேயானால் இப்படி பிச்சை எடுக்க வந்திருக்க மாட்டீர்கள்..ஊழியர்கள் எல்லாம் வட இந்தியாவில் இருந்து வந்தவர்களே..தூத்துக்குடியை சார்ந்தவர்கள் 100க்கு 10 பேர் கூட இருக்க மாட்டார்கள்..பின் எப்படி உங்கள் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும்... இறந்த மனிதர்களை நினைத்துப் பாருங்கள்...

அன்புசOct 25, 2021 - 09:35:10 PM | Posted IP 108.1*****

குடும்பத்த காப்பாத்த முடியலயா.ரேசனில் அரிசி இலவசம். அரசு பள்ளியில் கட்டணம் இல்லை.இதை போல் ரெம்ப இருக்கு..அப்புறம் கட்டிட வேலைக்கு 1000 வரைக்கும் கூலி கிடைக்குது..போய் வேலையை பாருங்க சோம்பேரிகளா..இந்த செய்தி காரன் பாவம் உழைக்க முடியாது . உங்களுக்கு என்னடா

RAJAOct 25, 2021 - 08:19:09 PM | Posted IP 162.1*****

UNUSELESS PEOPLE USE STERLITE THEIR SUPPORT

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory