» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் புகைமூட்டம்: பொதுமக்கள் மறியல்

வியாழன் 22, ஏப்ரல் 2021 9:04:02 PM (IST)

தூத்துக்குடியில் குப்பையில் தீப்பற்றியதால் குடியிருப்பு பகுதியில் புகை மூட்டம் ஏற்பட்டது. இதனைக் கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதற்கு என்று அரசு சார்பில் தனி இடம் கிடையாது. இதனால் இந்த பகுதியில் உள்ள குப்பைகளை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள கோமஸ்புரம் பகுதியில் சாலையோரத்தில் கொட்டி செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று எதிர்பாராதவிதமாக குப்பை தீ பற்றியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளித்தது. இதனால் அருகில் உள்ள கோமஸ்புரம் ஹவுசிங்போர்டு குடியிருப்பு பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். 

இதை தொடர்ந்து அந்த பகுதி பொதுமக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  உடனடியாக அங்கு வந்த தாளமுத்து நகர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் அதை தொடா்ந்து சிறிது நேரம் கழித்து தூத்துக்குடி தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thalir Products

Nalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory