» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி புதிய துறைமுத்தில் 20பேருக்கு கரோனா : நிர்வாக அலுவலகம் மூடல்

வியாழன் 22, ஏப்ரல் 2021 8:43:20 PM (IST)

தூத்துக்குடி புதிய துறைமுகம் அலுவலகத்தில் 20 ஊழியர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், நிர்வாக அலுவலகம் 26 ஆம் தேதி வரை மூடப்படுகிறது. 

தூத்துக்குடி வ.உ சிதம்பரனார் துறைமுக துறைமுக நிர்வாக அலுவலகத்தில் 200க்கு மேற்பட்ட அலுவலர்கள் பணியாற்றி வருகிறார்கள். தற்போது உலகம் முழுவதும் கரோனா 2வது அலை பரவி வருகிறது. துறைமுகத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, இதன் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் துறைமுகத்தில் பணிபுரியும் 20 பேருக்கு தொற்று உறுதியானது. 

இதைத் தொடர்ந்து 20 பேரும் தனிமைப் படுத்தப்பட்டனர். மேலும் இதைத் தொடர்ந்து துறைமுக நிர்வாக அலுவலகம் வருகிற 26ஆம் தேதி வரை நான்கு நாட்கள் மூடப்படும் என்று வஉசி துறைமுகம் நிர்வாகம் அறிவித்துள்ளது. துறைமுக நிர்வாக அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு ரூ.1500 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது கரோனா பரவலால் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products


Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory