» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பயிற்சி மையத்தை மூட மாணவிகள் எதிர்ப்பு: மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகை!!

வியாழன் 22, ஏப்ரல் 2021 4:19:56 PM (IST)தூத்துக்குடியில் போட்டித் தேர்வு பயிற்சி மையம் மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகத்தில் மாணவிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி போல்பேட்டையில் தனியார் போட்டித் தேர்வு பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு டிஎன்பிஎஸ்சி, வங்கிப் பணி, ரயில்வே உள்ளிட்ட பல்வேறு அரசு வேலைகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு ஏராளமான ஏழை, எளிய மாணவர்கள் இலவசமாக பயின்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக அந்த பயிற்சி மையத்தை மாநராட்சி அதிகாரிகள் மூட உத்தரவிட்டனர். 

இதனால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி தலைமயிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், ஒட்டுமொத்தமாக வர அனுமதியில்லை, உங்ளில் இருவர் மட்டும் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்க அனுமதிப்பதாக தெரிவித்தனர்.

பின்னர் மாணவிகளில் இருவர், ஆணையரை சந்தித்து, "பயிற்சி மையத்தில் மரத்தடியில் அமர்ந்து சமூக இடைவெளி மற்றும் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு படித்து வருகிறோம். ஏழை மாணவ, மாணவிகளான எங்களுக்கு இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நகரில் பல பயிற்சி மையங்கள் இயங்கி வருகிறது. தொடர்ந்து இயங்க மாநகராட்சி அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தனர். ஆனால் "கரோனா பாதுகாப்பு விதிகள் காரணமாக பயிற்சி மையம் இயங்க அனுமதியில்லை" என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். 


மக்கள் கருத்து

PradeepApr 23, 2021 - 11:04:27 AM | Posted IP 162.1*****

Sterlite will kill the tuticorin town... Don't want sterlite

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Thalir Products
Black Forest Cakes
Thoothukudi Business Directory