» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கரோனா நோயாளிகளை கண்காணிக்க வேண்டும் : ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவுறுத்தல்

திங்கள் 19, ஏப்ரல் 2021 5:21:32 PM (IST)தூத்துக்குடியில் தினசரி 15 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்களை நடத்திட வேண்டும்; வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ள கரோனா நோயாளிகளையும் கண்காணிக்க வேண்டும். என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார். 

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சரண்யா ஹரி, சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது குறித்தும், கரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள வீடுகள் துய்மைபடுத்தப்பட்டு பிளிச்சிங் பவுடர் தெளிப்பது குறித்தும், கரோனா பாதிப்பு கண்டறியும் பகுதிகளில் காய்ச்சல் முகம் நடுத்துவது குறித்தும், கரோனா பரிசோதனை செய்வதும் குறித்தும் ஆய்வு செய்தார்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழக அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக அனைத்து தரப்பினரும் கடைபிடிக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும். கரோனா பாதிப்பு 3 க்கும் மேல் உள்ள தெருக்களை சுத்தம் செய்து கிருமிநாசினி தெரிக்கவேண்டும். பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு முன்பு பீளிச்சிங் பவுடர் தெளித்து சுத்தப்படுத்த வேண்டும். 

தினசரி நகரம் மற்றும் ஊரக பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்களை அதிக அளவில் நடத்திட வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தினசரி குறைந்தது 15 இடங்களிதவது நடத்திட வேண்டும். கரோனா பரிசோதனைகள் தினசரி 2500 மேல் செய்திட வேண்டும். சனிக்கிழமை அன்று மேலும் கூடுதலான பரிசோதனை செய்திட வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு காவல்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் அங்கிருந்து மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் பணிகளை கண்காணிக்க வேண்டும். 

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கரோனா நோயாளிகளையும் கண்காணிக்க வேண்டும். கரோனா நோயாளிகளுக்கு தரமான உணவுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தினசரி காய்ச்சல் முகாம்கள் நடைபெறும் பகுதிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க வேணடும். கிருமிநாசினி பயன்படுத்துதல் மற்றும் மாஸ்க் அவசியம் அணிதல் பொது இடங்களில் தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நோமுக உதவியாளர் (பொது) அமுதா, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் தனபிரியா, தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, பொது சுகாதார இணை இயக்குநர் முருகவேல், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன், சுகாதார பணிகள் துணை இயக்குநர்கள் டாக்டர்.போஸ்கோராஜா, டாக்டர் அனிதா, மாநகராட்சி நல அலுவலர் வித்யா மற்றும் பல்வேறு துறைகள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam

Thalir ProductsBlack Forest Cakes
Thoothukudi Business Directory