» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஆட்டோவுக்கு தீவைப்பு: நள்ளிரவில் பரபரப்பு

திங்கள் 19, ஏப்ரல் 2021 11:47:46 AM (IST)



தூத்துக்குடியில் ஆட்டோவுக்கு தீவைத்ததாக அண்ணன்-தம்பி உள்ளிட்ட 3பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி முத்தையாபுரம் சூசை நகரைச் சேர்ந்தவர் மாரிசாமி மகன் சிவசக்தி (26), ஷேர் ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்று மதியம் வீட்டருகே நிறுத்தியிருந்த அவரது ஆட்டோவில் 3பேர் அமர்ந்து மது குடித்துள்ளனர். இதனை சிவசக்தி தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஆட்டோவின் இருக்கையை கிழித்ததுடன், ஆட்டோவை தீவைத்து எரித்து விடுவோம் என மிரட்டல் விடுத்தார்களாம். 

இது தாெடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த போஸ் மகன்கள் இன்னாசி (27), அருள் (22), முத்தையா மகன் ரூபன் (20) ஆகிய 3பேர் மீது சிவசக்தி முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் ஆட்டோவுக்கு அவர்கள் மூவரும் தீவைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் சிவசக்தி மேலும் ஒரு புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள 3பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest Cakes



Thalir Products





Thoothukudi Business Directory