» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கருப்பு வைரம் என கூறி ரூ.27லட்சம் கேட்டு மோசடி : 2பேர் கைது : போலீசாருக்கு எஸ்பி பாராட்டு
வியாழன் 11, பிப்ரவரி 2021 3:35:07 PM (IST)

தூத்துக்குடியில் கருப்பு வைரம் என கூறி ரூ.27 லட்சம் கேட்டு மோசடியில் ஈடுபட முயன்ற கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெங்களூர் ஜே.பி நகர் கொத்தனூர் தின்னே பகுதியை சேர்ந்தவர் சீதாராமன் மகன் அனந்தா (37) மற்றும் ஓசூர் பெஸ்தி இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் தனுராம் மகன் வெங்கடேஷ் பாபு (45) ஆகியோர் கடந்த சில நாட்களாக தங்களிடம் கருப்பு வைரம் இருப்பதாகவும், அவசரத் தேவைக்கு வாங்கி விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்று ரூ.27 லட்சம் பணம் கேட்டு தூத்துக்குடியில் உள்ள சில நகை வியாபாரிகள் மற்றும் தனி நபர்களிடம் கேட்டு மோசடி செய்ய முயன்றுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன், உதவி ஆய்வாளர் ரவிக்குமார், முதல் நிலைக் காவலர்கள் மாணிக்கராஜ், மகாலிங்கம், காவலர்கள் செந்தில், ஸ்ரீதர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு மேற்படி அனந்தா மற்றும் வெங்கடேஷ் பாபு ஆகியோரை கைது செய்து, வைத்திருந்த 425 கேரட் எடையுள்ள கருப்பு வைரம் எனப்படுவதையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தென்பாகம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை செய்தார்.
பின் கைது செய்யப்பட்டவர்களின் பின்னணி குறித்தும், கைப்பற்றப்பட்ட கருப்பு வைரத்தின் தன்மையை ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்யுமாறு தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மற்றும் தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் ஆகியோருக்கு உத்தரவிட்டார். இது குறித்து தகவலறிந்து மோசடி வேலையில் ஈடுபடவிருந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இருவரை கைது செய்த தென்பாகம் காவல் ஆய்வாளர் தலைமையிலான தென்பாகம் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்.25ல் இறைச்சி கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!!
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:45:46 PM (IST)

முக கவசம் அணியாத 1156 பேருக்கு ரூ.2.31 லட்சம் அபராதம்
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:38:38 PM (IST)

தூத்துக்குடியில் நாளை காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்: ஆட்சியர் தகவல்
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:28:04 PM (IST)

ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் மீண்டும் கலவரம் வெடிக்கும் : பேராசிரியை பாத்திமா பாபு
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:22:16 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : ரஜினிகாந்த் பதில்
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:08:12 PM (IST)

தூத்துக்குடியில் பயிற்சி மையத்தை மூட மாணவிகள் எதிர்ப்பு: மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகை!!
வியாழன் 22, ஏப்ரல் 2021 4:19:56 PM (IST)
