» செய்திகள் - விளையாட்டு » உலகம்
வியத்நாமில் படகு கவிழ்ந்து கோர விபத்து: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி!
சனி 11, ஜூலை 2026 5:50:04 PM (IST)

வியத்நாமில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெற்கு வியத்நாமில் உள்ள பு குவாக் தீவு அருகே 32 இந்தியர்கள் மற்றும் 4 ஊழியர்களுடன் சென்ற சுற்றுலாப் படகு காலை 11:30 மணியளவில் கடலில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இக் கோர விபத்தில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 15 பேர் உயிரிழந்துள்ளதாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குள்ளான படகில் பயணித்தவர்களில் 10 க்கும் மேற்பட்டோர் தமிழர்கள் எனக் கூறப்படுகிறது. இதில் திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த முருக பிரபு (தந்தை பெயர்: ஆறுமுகம்) என்பவர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் இரண்டு நாட்களுக்கு முன்பாகத் தனது நண்பருடன் வியத்நாம் சென்றிருந்தார். உயிரிழந்த இதர நபர்கள் யார் யார் என்பது குறித்த முழுமையான விபரங்களை விரைவில் அறிவிப்பதாக வியத்நாமில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இப்படகு விபத்து தொடர்பாகப் பாதிப்படைந்தவர்களின் குடும்பத்தினர் தொடர்பு கொள்ள ஹோ சி மின் நகரத்தில் அவசரக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, +84 36 281 7930, +84 91 552 37 14, +84 33 452 0414 ஆகிய உதவி எண்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஹனோய் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ள +84 91 308 9165 என்ற அவசர எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்கள்: சிரியா முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:50:59 PM (IST)

அமெரிக்காவுக்கு ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும்: டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 10:39:39 AM (IST)

சீனா, ஜப்பானை உலுக்கிய 'டால்பின்' சூறாவளி: விமானங்கள் ரத்து: 10 லட்சம் பேர் வெளியேற்றம்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 5:08:02 PM (IST)

இந்தியப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரி : அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:34:04 AM (IST)

ஸ்பெயினுக்குள் நுழைய முயன்று அகதிகள் கடலில் மூழ்கிய பரிதாபம்: உயிரிழப்பு 100 ஆக உயர்வு!
சனி 8, ஆகஸ்ட் 2026 5:49:35 PM (IST)

இலங்கையில் தொடரும் சிறைக் கலவரங்கள்: கைதிகள் மோதலில் 3 பேர் பலி; 23 பேர் படுகாயம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 12:18:26 PM (IST)








