» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியா - நியூஸிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று மைல்கல்: பிரதமர் மோடி பெருமிதம்!
சனி 11, ஜூலை 2026 12:21:14 PM (IST)

இந்தியா - நியூஸிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கும் புதிய வேகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும் ஒரு வரலாற்று மைல்கல் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நியூஸிலாந்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியின் போது, அந்நாட்டுத் தூதுக்குழுவினர் சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் இந்தியாவுக்கு வருகை தந்தபோது இத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டதை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, மிகக் குறுகிய காலத்திற்குள் இப் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவந்ததற்காக நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இரு கடல்சார் நாடுகளுக்கிடையேயான இந்த ஒத்துழைப்பு, இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டும் முயற்சிகளை மென்மேலும் வலுப்படுத்தும் எனப் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இச் சந்திப்பின் மூலம் இரு நாடுகளும் தங்களின் உறவை அடுத்தகட்டத்திற்குக் கொண்டுசெல்லும் வகையில் புதிதாக வியூகக் கூட்டாண்மையில் இணைந்துள்ளன. இவ் வர்த்தக ஒப்பந்தத்தைத் தாண்டி இருநாட்டு உறவுகளையும் மேலும் விரிவுபடுத்துவதே இரு நாடுகளின் முதன்மை நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜூலை 10 அன்று பிரதமர் மோடி நியூஸிலாந்து சென்றடைந்ததன் மூலம், 40 ஆண்டுகளுக்குப் பின் அந்நாட்டுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

துபாய் இந்தியத் துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடல்: பாஸ்போர்ட், விசா சேவைகள் நிறுத்தம்!
வெள்ளி 17, ஜூலை 2026 12:53:31 PM (IST)

ஈரான் தாக்குதலில் இந்தியர் மரணம் : கப்பல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!
வியாழன் 16, ஜூலை 2026 12:37:58 PM (IST)

ஹோர்முஸ் தாக்குதலில் இந்திய மாலுமி பலி: ஈரானுக்கு மத்திய அரசு கண்டனம்!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:20:43 PM (IST)

ஈரானைக் கற்காலத்திற்குக் கொண்டு வந்துவிட்டோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிக்கை!
செவ்வாய் 14, ஜூலை 2026 12:11:48 PM (IST)

ஈரானுக்கு ஆதரவாக களம் இறங்கிய ரஷியா: அதிநவீன உளவு விமானத்தை அனுப்பினார் புதின்!
செவ்வாய் 14, ஜூலை 2026 8:33:19 AM (IST)

வங்கதேசத்தில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு : 51 பேர் உயிரிழப்பு; 10 லட்சம் மக்கள் பாதிப்பு!
திங்கள் 13, ஜூலை 2026 5:04:09 PM (IST)








