» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்க மண்ணில் பிறந்தால் குடியுரிமை: நீதிமன்றம் உத்தரவு - அதிபர் டிரம்புக்குப் பலத்த பின்னடைவு!
வியாழன் 2, ஜூலை 2026 5:19:07 PM (IST)
அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் தானியங்கி பிறப்புரிமை குடியுரிமையைக் கட்டுப்படுத்தக் கோரி அதிபர் டொனால்டு டிரம்ப் பிறப்பித்த நிர்வாக உத்தரவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடியாக நிராகரித்துள்ளது.
அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது திருத்தத்தின்படி, 1868-ம் ஆண்டு முதல் அந்நாட்டு மண்ணில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்குத் தானாகவே குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை மாற்றி அமைக்கும் நோக்கில், அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாக உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தார். தற்போதைய குடியுரிமைக் கொள்கையை ஒரு அவமானம் என்று டிரம்ப் விமர்சித்திருந்தார். அதேபோல், அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், இது உலகிலேயே மிகவும் முட்டாள்தனமான குடியேற்றக் கொள்கை என்று முன்பு குறிப்பிட்டிருந்தார்.டிரம்பின் நிர்வாக உத்தரவுக்குச் சட்ட ரீதியாகப் பலத்த எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 14-வது திருத்தத்தின் நீண்டகால விளக்கம் தவறானது என்று டிரம்ப் நிர்வாகம் நீதிமன்றத்தில் வாதிட்டது. அமெரிக்கக் குடிமக்கள் அல்லாதவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அமெரிக்காவின் அதிகார வரம்பிற்குள் வரமாட்டார்கள் என்றும், எனவே அவர்களுக்குத் தானாகவே குடியுரிமை பெற உரிமை இல்லை என்றும் டொனால்டு டிரம்ப் தரப்பு வாதிட்டது.
ஆனால், டிரம்ப் நிர்வாகத்தின் இந்த வாதத்தை உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக நிராகரித்தது. 6-3 என்ற நீதிபதிகளின் பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில், அமெரிக்க மண்ணில் பிறக்கும் அனைவருக்கும் பிறப்புரிமை குடியுரிமை வழங்குவதை உறுதி செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிகளவு போதையால் சவுதி இளவரசர் மரணம்: பிரிட்டன் நீதிமன்ற விசாரணையில் உறுதி
வெள்ளி 24, ஜூலை 2026 4:15:17 PM (IST)

கப்பல்களைத் தாக்கினால் ஈரானின் மின் நிலையங்கள் அழிக்கப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!
வியாழன் 23, ஜூலை 2026 11:36:09 AM (IST)

ஹவுதி அமைப்பினர் எச்சரிக்கை: இந்தியா, சீனா வந்த 3 கச்சா எண்ணெய் கப்பல்கள் திசைமாற்றம்!
புதன் 22, ஜூலை 2026 4:22:18 PM (IST)

ரஷிய ஏவுகணைத் தாக்குதலில் 4 இந்தியர்கள் பலி: இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம்
செவ்வாய் 21, ஜூலை 2026 12:42:30 PM (IST)

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நள்ளிரவில் ஏவுகணைத் தாக்குதல்: ஒருவர் பலி; 16 பேர் காயம்!
திங்கள் 20, ஜூலை 2026 5:01:30 PM (IST)

துபாய் இந்தியத் துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடல்: பாஸ்போர்ட், விசா சேவைகள் நிறுத்தம்!
வெள்ளி 17, ஜூலை 2026 12:53:31 PM (IST)








