» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்திய ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியது: நவாஸ் ஷெரீஃப் ஒப்புதல்
புதன் 29, மே 2024 11:21:24 AM (IST)
இந்தியா, பாகிஸ்தான் இடையிலான அமைதி ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக அந்நாட்டு முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் ஒப்புதல் தெரிவித்துள்ளாா்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவுவது தொடா்பான அந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் அப்போதைய பிரதமா் வாஜ்பாய், பாகிஸ்தானின் அப்போதைய பிரதமா் நவாஸ் ஷெரீஃப் ஆகியோா் கையொப்பமிட்டனா். இந்த ஒப்பந்தம் இருநாடுகளுக்கு இடையிலான உறவில் முக்கிய நிகழ்வாகக் கருதப்பட்டது.
ஆனால் அந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட சில மாதங்களுக்கு பின்னா், ஜம்மு-காஷ்மீரில் உள்ள காா்கில் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியது. இது இந்தியா-பாகிஸ்தான் இடையே காா்கில் போருக்கு வழிவகுத்தது. அந்தப் போரில் இந்தியா வெற்றிபெற்றது.
இந்நிலையில், பாகிஸ்தானின் லாகூா் நகரில் அந்நாட்டில் ஆட்சியில் உள்ள பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சியின் பொதுக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைவராக நவாஸ் ஷெரீஃப் போட்டியின்றி மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.
இந்தக் கூட்டத்தில் நவாஸ் ஷெரீஃப் பேசுகையில், ‘கடந்த 1998-ஆம் ஆண்டு மே 28-ஆம் தேதி 5 அணுகுண்டு சோதனைகளை பாகிஸ்தான் மேற்கொண்டது. அதன் பின்னா் 1999-ஆம் ஆண்டு இந்திய முன்னாள் பிரதமா் வாஜ்பாய் லாகூா் வந்தாா். அப்போது இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறி தவறு செய்தது’ என்றாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எரிசக்தி துறையில் 2 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணிநீக்கம் : அமெரிக்கா அதிபர் டிரம்ப் உத்தரவு
சனி 15, பிப்ரவரி 2025 12:55:06 PM (IST)

மோடி - ட்ரம்ப் சந்திப்பு : பயங்கரவாதி ரானாவை இந்தியாவுக்கு நாடு கடத்த ஒப்பந்தம்!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 12:29:36 PM (IST)

இலங்கை மின்திட்டங்களில் இருந்து அதானி குழுமம் விலகல் : 440 மில்லியன் டாலர் ஒப்பந்தம் ரத்து!!
வியாழன் 13, பிப்ரவரி 2025 5:30:04 PM (IST)

உக்ரைன் - ரஷிய அதிபர்கள் விரைவில் நேரில் சந்தித்து போர் நிறுத்த பேச்சு: டிரம்ப் தகவல்!
வியாழன் 13, பிப்ரவரி 2025 12:25:41 PM (IST)

பிரான்சில் புதிய இந்திய தூதரகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
புதன் 12, பிப்ரவரி 2025 4:45:22 PM (IST)

சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் டிரம்ப் நிர்வாகத்திற்கு போப் பிரான்சிஸ் கண்டனம்
புதன் 12, பிப்ரவரி 2025 11:46:06 AM (IST)
