» செய்திகள் - விளையாட்டு » உலகம்
டிரம்ப் மீதான துப்பாக்கி சூடு எதிரொலி: அமெரிக்க உளவுப் பிரிவு இயக்குனர் ராஜினாமா
புதன் 24, ஜூலை 2024 5:18:16 PM (IST)
அமெரிக்காவில் டிரம்ப் மீதான துப்பாக்கி சூடு எதிரொலியாக உளவுப் பிரிவின் இயக்குனர் கிம்பர்லி சீட்டல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

டிரம்ப் மீது தாக்குதல் நடத்திய 20 வயது இளைஞர் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் சுட்டுக்கொல்லப்பட்டார். இருப்பினும் டிரம்ப் மீதான தாக்குதல் அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாதுகாப்பு விஷயத்தில் அமெரிக்காவின் உளவுப் பிரிவின் (சீக்ரெட் சர்வீஸ்) கவனக்குறைவே காரணம் என புகார்கள் எழுந்தன.
பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக நேற்று முன்தினம் மேற்பார்வை குழு விசாரணை நடத்தியது. அப்போது, டிரம்ப் மீதான தாக்குதலை கையாண்டது குறித்து உளவுப் பிரிவின் இயக்குனர் கிம்பர்லி சீட்டல் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 2022-ம் ஆண்டு முதல் உளவுப் பிரிவு இயக்குனராக பணியாற்றி வந்த கிம்பர்லி சீட்டல், டிரம்ப் பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விட்டதாகவும், குற்றவாளி டிரம்பை நெருங்கி வந்தது எப்படி? என்றும் கேள்வி எழுப்பினர்.
அப்போது, டிரம்பின் உயிரை பறிக்க முயன்ற இந்த சம்பவம், உளவுப்பிரிவின் தோல்வி என்றும், நடந்த குளறுபடிகளுக்கு முழு பொறுப்பை ஏற்பதாகவும் அவர் கூறி உள்ளார். இந்நிலையில், உளவுப் பிரிவின் இயக்குனர் கிம்பர்லி சீட்டல் நேற்று ராஜினாமா செய்தார்.
இ-மெயில் மூலம் அவர் அனுப்பி உள்ள ராஜினாமா கடிதத்தில், "பாதுகாப்பு குறைபாட்டிற்கு நான் முழுப் பொறுப்பேற்கிறேன். சமீபத்திய அசம்பாவித சம்பவங்கள் காரணமாக, கனத்த இதயத்துடன் இயக்குனர் பதவியில் இருந்து விலகும் கடினமான முடிவை எடுத்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக ஹார்வர்டு பல்கலை வழக்கு : மாணவர்கள் போராட்டம்!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 12:25:23 PM (IST)

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவு : உலக தலைவர்கள் இரங்கல்!
திங்கள் 21, ஏப்ரல் 2025 4:58:36 PM (IST)

ஷேக் ஹசினாவை கைது செய்ய சர்வதேச போலீஸ் உதவியை நாடிய வங்கதேச இடைக்கால அரசு
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:41:11 AM (IST)

கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை: அமெரிக்காவில் பரபரப்பு
சனி 19, ஏப்ரல் 2025 12:10:16 PM (IST)

பூமிக்கு வெளியே கே2-18பி கோளில் உயிரினங்கள்: இந்திய வம்சாவளி விஞ்ஞானி கண்டுபிடிப்பு!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 11:04:40 AM (IST)

சீன பொருட்களுக்கு 245% வரி : டிரம்ப் அரசு அதிரடி
வியாழன் 17, ஏப்ரல் 2025 11:11:47 AM (IST)
