» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இங்கிலாந்தில் ஜூலை 4‍ல் பொதுத்தேர்தல்: பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு

வியாழன் 23, மே 2024 5:16:12 PM (IST)

இங்கிலாந்தில் ஜூலை 4 ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதாக பிரதமர் ரிஷி சுனக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் அரசியலமைப்பு ரீதியாக 2025 ஜனவரிக்குள் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும். இது தொடர்பாக பிரதமர் சுனக் இது 2024 இன் பிற்பகுதியில் நடைபெறும் என்று பலமுறை கூறியிருந்தார். இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு இங்கிலாந்தில் ஜூலை 4 ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

44 வயதான ரிஷி சுனக், பிரதமராக முதல் முறையாக வாக்காளர்களை எதிர்கொள்ள போகின்ற தேர்தல் இதுவாகும். கடந்த அக்டோபர் 2022 இல் நடந்த வாக்கெடுப்புக்குப் பிறகு அவர் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் பிரதமரானார். வரும் ஜூலையில் நடைபெற உள்ள இங்கிலாந்து தேர்தல் என்பது, 2016 ஆம் ஆண்டு பிரெக்சிட் வாக்கெடுப்புக்குப் பின்னர் நடைபெறவுள்ள மூன்றாவது பொதுத் தேர்தலாகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors




Arputham Hospital




Thoothukudi Business Directory