» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கிர்கிஸ்தானில் இந்திய மாணவர்கள் வெளியே வர வேண்டாம் : இந்திய தூதரகம் வேண்டுகோள்

சனி 18, மே 2024 5:42:58 PM (IST)

கிர்கிஸ்தானில் உள்ள இந்திய மாணவர்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று இந்திய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கிர்கிஸ்தானில் பாகிஸ்தான் நாட்டவர்கள் தாக்கப்பட்டிருப்பதால் அங்கு வாழும் பிற நாட்டவர்கள் அச்சத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டவர்கள் சிலர் மீது கிர்கிஸ்தானியர்கள் தாக்குதல் நடத்தினர். இது பாகிஸ்தானுக்கு பெரும் கவலையை தந்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அவரது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: 

கிர்கிஸ்தானில் பாகிஸ்தான் மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து மிக தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மிக கவலை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தேவையான உதவியை செய்யுமாறு தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அதிகாரிகள் அவர்களுடன் தொடர்பில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இது போல் கிர்கிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில்: இந்திய மாணவர்கள் யாரும் வெளியே வர வேண்டாம். வீட்டிற்குள்ளே யே இருங்கள். யாருக்கும் உதவி ஏதும் தேவைப்பட்டால் இந்திய தூதரகத்தை கட்டுப்பாட்டு அறை எண்: 0555710041 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory