» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஈரானில் கனமழை வெள்ளத்தில் 7 பேர் பலி: 250 பேர் மீட்பு!

சனி 18, மே 2024 11:36:47 AM (IST)ஈரானில் கனமழை வெள்ளத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய 250 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

பாரசிக வளைகுடா நாடுகளில் ஒன்றான ஈரானின் கடந்த சில தினங்களாக இயல்பை காட்டிலும் அதிக அளவு மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் கொரசன் ரசவி மாகாணம் மசாத் நகரில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அங்குள்ள குடியிருப்பு கட்டிடங்கள் நீரில் மூழ்கி தத்தளித்தன. மின்கம்பங்கள், மரங்கள் ஆகியவை வேரோடு பிடுங்கப்பட்டு அடித்துச்செல்லப்பட்டன. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. 250 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரில் சிக்கி உயிரிழந்த 2 பேர் உள்பட ஈரானில் கனமழைக்கு இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக அந்தநாட்டின் பேரிடர் மீட்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது. காணாமல் போன 12 பேரை தேடும் பணி தீவிரமாக நடத்து வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory