» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் ராஜினாமா அறிவிப்பு!

செவ்வாய் 16, ஏப்ரல் 2024 11:40:18 AM (IST)

சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் தனது பதவியை மே மாதம் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 

சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் (72) தலைமையிலான மக்கள் செயல் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. நாட்டின் 3-வது பிரதமரான இவர் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார். சமீப காலமாக இந்த கட்சியின் அமைச்சர் மற்றும் எம்.பி.,க்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதன்காரணமாக 2 எம்.பி.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்தநிலையில் பிரதமர் லீ சியென்னும் அடுத்த மாதம் (மே) 15-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும் தான் பதவி விலகும் அதேநாளில் லாரன்ஸ் வோங் பிரதமராக பதவியேற்பார் எனவும் அவர் கூறி உள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் `எந்தவொரு நாட்டுக்கும் தலைமை மாற்றம் ஒரு முக்கியமான தருணம்' என அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory