» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஆஸ்திரேலியாவில் வணிக வளாகத்தில் கத்திக்குத்து தாக்குதல்: 5 பேர் பலி!
சனி 13, ஏப்ரல் 2024 5:29:58 PM (IST)
ஆஸ்திரேலியாவில் வணிக வளாகத்தில் மர்ம நபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பொண்டி ஜங்ஷன் பகுதியில் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் இன்று காலை வழக்கம்போல வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், அப்போது வணிக வளாகத்திற்குள் நுழைந்த நபர் தான் வைத்திருந்த கத்தியால் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக குத்தினார். இந்த கத்திக்குத்து தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதல் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர். இதையடுத்து, படுகாயமடைந்தவர்களை மீட்ட போலீசார் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கத்திக்குத்து தாக்குதலை நடத்தியது யார்? தாக்குதலுக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எரிசக்தி துறையில் 2 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணிநீக்கம் : அமெரிக்கா அதிபர் டிரம்ப் உத்தரவு
சனி 15, பிப்ரவரி 2025 12:55:06 PM (IST)

மோடி - ட்ரம்ப் சந்திப்பு : பயங்கரவாதி ரானாவை இந்தியாவுக்கு நாடு கடத்த ஒப்பந்தம்!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 12:29:36 PM (IST)

இலங்கை மின்திட்டங்களில் இருந்து அதானி குழுமம் விலகல் : 440 மில்லியன் டாலர் ஒப்பந்தம் ரத்து!!
வியாழன் 13, பிப்ரவரி 2025 5:30:04 PM (IST)

உக்ரைன் - ரஷிய அதிபர்கள் விரைவில் நேரில் சந்தித்து போர் நிறுத்த பேச்சு: டிரம்ப் தகவல்!
வியாழன் 13, பிப்ரவரி 2025 12:25:41 PM (IST)

பிரான்சில் புதிய இந்திய தூதரகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
புதன் 12, பிப்ரவரி 2025 4:45:22 PM (IST)

சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் டிரம்ப் நிர்வாகத்திற்கு போப் பிரான்சிஸ் கண்டனம்
புதன் 12, பிப்ரவரி 2025 11:46:06 AM (IST)
