» செய்திகள் - விளையாட்டு » உலகம்

போருக்கு இப்போதே ஆயத்தமாக வேண்டும்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்

வியாழன் 11, ஏப்ரல் 2024 4:37:11 PM (IST)

வடகொரியாவை சுற்றி நிலைத்தன்மையற்ற நிலவுவதால் போருக்கு ஆயத்தமாக வேண்டியுள்ளது என அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்தார்.

வட கொரிய அதிபராக பதவி வகித்து வருபவர் கிம் ஜாங் உன். தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் மோதி வரும் இவர், உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறார். இதற்கிடையே, அமெரிக்காவும் தென் கொரியாவும் ராணுவ பயிற்சிகளை அதிகளவில் மேற்கொண்டு வருவதால் கொரிய தீபகற்பத்தில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது என வடகொரியா கூறியிருந்தது.

இந்நிலையில், வடகொரியாவின் ராணுவ பல்கலைக்கழகத்தை கிம் ஜாங் உன் ஆய்வுசெய்தார். அதன்பின் அவர் பேசியதாவது: வடகொரியாவை சுற்றி நிலைத்தன்மையற்ற அரசியல் சூழல் உள்ளது. எனவே, கடந்த காலத்தைக் காட்டிலும் இப்போது போருக்கு ஆயத்தமாக வேண்டியுள்ளது என தெரிவித்தார்.


மக்கள் கருத்து

திமுக குடும்ப ஆட்சி ஒழிகApr 12, 2024 - 11:06:23 AM | Posted IP 172.7*****

அங்கேயும் குடும்ப குடும்ப ஆட்சி தான். கேவலம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory