» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்திய நடனக்கலைஞர் சுட்டுக் கொலை: அமெரிக்காவில் தொடரும் பயங்கரம்!!

சனி 2, மார்ச் 2024 5:24:35 PM (IST)

அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த அமர்நாத் கோஷ் என்ற நடனக்கலைஞர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

2024ம் ஆண்டு பிறந்ததில் இருந்து அமெரிக்காவில் படிக்கும் இந்தியர்கள் அடுத்தடுத்து இறந்து வருகின்றனர். சிலர் தாக்குதலுக்கு உள்ளான நிலையிலும், ஓரிருவர் மர்மமான முறையிலும் இறந்தனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவைச் சேர்ந்தவர் அமர்நாத் கோஷ். நடனக்கலைஞர். பெற்றோர் இறந்துவிட்டனர். அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் பிஎச்டி படித்து வந்தார். அங்கு அவர், படித்து வந்த கல்வி நிலையம் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது, மர்ம நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி, அவர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதனை கோல்கட்டாவில் வசிக்கும் அவரது நண்பர், சிக்காகோவில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இதனையடுத்து இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், அமர்நாத் கோஷ் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்களின் அறிக்கையை கவனித்து வருகிறோம் என தெரிவித்துள்ளது. மேலும், "அமர்நாத் கோஷின் உறவினர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். இந்த சம்பவத்தை போலீசார் மற்றும் கல்வி நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்" என்று தெரிவித்து உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


Thoothukudi Business Directory