» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னியின் உடல் அடக்கம்: ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி!

சனி 2, மார்ச் 2024 12:23:38 PM (IST)



ரஷியாவில், சிறையில் மர்மமான முறையில் இறந்த எதிர்க்கட்சி தலைவர் நவால்னியின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

ரஷிய எதிர்க்கட்சி தலைவரும், அதிபர் புதினின் தீவிர எதிர்ப்பாளருமான அலெக்சி நவால்னிக்கு பல்வேறு வழக்குகளில் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஆர்க்டிக் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த சூழலில் கடந்த மாதம் 17-ந் தேதி அவர் திடீரென சிறையிலேயே மரணமடைந்தார். அவரது உயிரிழப்புக்கான காரணம் தற்போதுவரை தெரிவிக்கப்படவில்லை.

நவால்னி மர்மமான முறையில் சிறையில் மரணம் அடைந்த சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே அலெக்சி நவால்னியின் உடலை ரஷிய அரசு தங்களிடம் ஒப்படைக்க மறுப்பதாக நவால்னியின் மனைவி மற்றும் தாயார் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு நவால்னியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

அதை தொடர்ந்து, மாஸ்கோவின் தென்கிழக்கு மரியினோ மாவட்டத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் நவால்னியின் இறுதி சடங்கு நேற்று நடைபெற்றது. அதன் பின்னர் தேவாலயத்துக்கு அருகில் உள்ள மயானத்தில் நவால்னியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அலெக்சி நவால்னி அடக்கம் செய்யப்பட்ட கல்லறைக்கு வெளியே, சில ஆதரவாளர்கள் அவரது பெயரை தொடர்ந்து உச்சரித்து கொண்டே இருந்தனர். மேலும் சிலர் கிரெம்ளினுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ஆயிரக்கணக்கானோர் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory