» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உக்ரைனுக்கு தொடர்ந்து உதவுவோம் : பிரிட்டன் பிரதமர் உறுதி

சனி 24, பிப்ரவரி 2024 4:59:56 PM (IST)

உக்ரைன் - ரஷ்யா போர் துவங்கி, 2 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், உக்ரைனுக்கு தொடர்ந்து உதவுவோம் என பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உறுதி அளித்துள்ளார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ளது. இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவு பெற்றது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் தீவிரமாக போரிட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன் ரஷ்யாவிற்கு எதிராக, பல பொருளாதார மற்றும் வர்த்தக கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு கொண்டு வந்தது.

இந்நிலையில் இன்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறியிருப்பதாவது: போர் துவங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ரஷ்யாவின் ஆதிக்க மனப்பான்மையை எதிர்க்கும் நிலைப்பாட்டில் பிரிட்டன் மேலும் உறுதியாக உள்ளது. என்றுமே சர்வாதிகாரம் வெற்றி பெறுவதில்லை. நாங்கள் இன்றும் உக்ரைன் பக்கமே நிற்கிறோம். தொடர்ந்தும் நிற்போம். இதற்காக எத்தனை நாட்கள், என்னென்ன செய்ய வேண்டுமோ, அனைத்தையும் செய்வோம். இவ்வாறு ரிஷி சுனக் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் முன் எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானத்தை உக்ரைன் படைகள் சுட்டு வீழ்த்தி உள்ளது. விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் கூறியது குறித்து ரஷ்ய ராணுவம் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


Thoothukudi Business Directory