» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா: இலங்கை மக்கள் பங்கேற்ப்பு; இந்தியர்கள் புறக்கணிப்பு
சனி 24, பிப்ரவரி 2024 4:29:33 PM (IST)
இந்திய- இலங்கை பக்தா்கள் ஒன்றினைந்து கலந்துகொள்ளும் திருவிழாவான கச்சத்தீவு அந்தோணியாா் ஆலய திருவிழாவில் இலங்கை பக்தர்கள் மட்டுமே பங்கேற்றனர். இந்தியர்கள் புறக்கணித்தனர்.
ஆண்டுதோறும் இந்திய- இலங்கை பக்தா்கள் ஒன்றினைந்து வெகு விமர்சையாக நடைபெறும் திருவிழா கச்சத்தீவு அந்தோணியாா் ஆலய திருவிழா. இந்த திருவிழா பிப்ரவரி 23-24 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. திருவிழா வியாழக்கிழமை மாலை (பிப். 23) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதில், சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இன்று இடம்பெற்றன.
ஆண்டு திருவிழா திருப்பலி நிகழ்வு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. இந்த திருவிழாவில் இலங்கையில் இருந்து 4354 பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்திய பக்தர்கள் இந்திய மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி யாரும் பங்கேற்கவில்லை.
இந்த திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள், போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இன்றைய திருவிழாவில் கடற்படை உயர் அதிகாரிகள் அதிபரின் செயலாளர்கள், யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு இஸ்ரேல் உறுதுணையாக இருக்கும்: நெதன்யாகு
புதன் 23, ஏப்ரல் 2025 3:50:45 PM (IST)

ஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்பு இல்லை : பாகிஸ்தான் அமைச்சர் சொல்கிறார்
புதன் 23, ஏப்ரல் 2025 11:41:14 AM (IST)

டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக ஹார்வர்டு பல்கலை வழக்கு : மாணவர்கள் போராட்டம்!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 12:25:23 PM (IST)

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவு : உலக தலைவர்கள் இரங்கல்!
திங்கள் 21, ஏப்ரல் 2025 4:58:36 PM (IST)

ஷேக் ஹசினாவை கைது செய்ய சர்வதேச போலீஸ் உதவியை நாடிய வங்கதேச இடைக்கால அரசு
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:41:11 AM (IST)

கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை: அமெரிக்காவில் பரபரப்பு
சனி 19, ஏப்ரல் 2025 12:10:16 PM (IST)
