» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் 83.3 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!
சனி 27, ஜனவரி 2024 10:43:05 AM (IST)
அமெரிக்க பெண் எழுத்தாளர் தொடர்ந்த வழக்கில் முன்னாள் அதிபர் டிரம்ப் 83.3 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த டிரம்ப், தனது சமூக வலைதளத்தில் ஜீன் கரோலை விமர்சித்து பல்வேறு பதிவுகளை வெளியிட்டார். இந்நிலையில் டிரம்புக்கு எதிராக நியூயார்க் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த ஜீன் கரோல், தனக்கு 10 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க டிரம்புக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
இதன்படி, எழுத்தாளர் ஜீன் கரோலுக்கு நஷ்ட ஈடாக டொனால்டு டிரம்ப் 83.3 மில்லியன் டாலர் வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். எழுத்தாளர் ஜீன் கரோல் கேட்டதை விட சுமார் 10 மடங்கு அதிக தொகையை இழப்பீடாக வழங்க டிரம்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது, தீர்ப்பை வாசிப்பதற்கு முன்னாகவே கோர்ட்டில் இருந்து டிரம்ப் வெளியேறினார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "இது அமெரிக்கா இல்லை" என்று கூறிவிட்டுச் சென்றார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த தீர்ப்பு டிரம்புக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இஸ்ரேல் தாக்குதல்: ஈரான் ராணுவ தளபதிகள், அணு விஞ்ஞானிகள் பலி
வெள்ளி 13, ஜூன் 2025 12:15:19 PM (IST)

ஆமதாபாத் விமான விபத்து அதிர்ச்சியை அளிக்கிறது : பிரிட்டன் பிரதமர் வேதனை!
வியாழன் 12, ஜூன் 2025 4:49:39 PM (IST)

தென் ஆப்பிரிக்காவில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளி பேருந்து: குழந்தைகள் உட்பட 49 பேர் உயிரிழப்பு
வியாழன் 12, ஜூன் 2025 10:59:18 AM (IST)

அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்து விமர்சனம்: வருத்தம் தெரிவித்தார் எலான் மஸ்க்!
புதன் 11, ஜூன் 2025 4:56:11 PM (IST)

குற்றவாளியை போல கைது செய்யப்பட்ட இந்திய மாணவர் : அமெரிக்கா விளக்கம்!
புதன் 11, ஜூன் 2025 11:41:53 AM (IST)

மலேசியாவில் கல்லூரி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 15 பேர் பலி - 30பேர் படுகாயம்
செவ்வாய் 10, ஜூன் 2025 12:48:37 PM (IST)
