» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இஸ்ரேலில் பாலஸ்தீனர்களை பணியமர்த்த தடை : 20ஆயிரம் இந்தியர்களுக்கு வாய்ப்பு!

புதன் 24, ஜனவரி 2024 5:01:18 PM (IST)

இஸ்ரேலில் பாலஸ்தீனர்களை பணியமர்த்த அரசு தடை விதித்துள்ள நிலையில், 20,000 பணியிடங்கள் இந்தியர்களால் நிரப்பப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இஸ்ரேல் - ஹமாஸுக்கு இடையேயான போரில் காஸா மக்கள் பல்லாயிரக்கணக்கில் உயிரிழந்துவரும் நிலையில், இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனர்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். இஸ்ரேலில் பணிபுரிந்த பத்தாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். இஸ்ரேல் அரசு பாலஸ்தீனர்களை பணியமர்த்த தடை விதித்தது. அவர்களின் பணியாளர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. 

இதனால் இஸ்ரேல் நிறுவனங்கள் பலவற்றில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. முக்கியமாக கட்டுமானப் பணிகளுக்கு அதிகமான ஆட்கள் தேவைப்படுவதாகத் தெரிகிறது.  கடந்த அக்டோபர் மாதம் தெல் அவிவில் உள்ள பல கட்டுமான நிறுவனங்கள், இஸ்ரேல் அரசிடம் 1 லட்சம் இந்தியர்களைப் பணியமர்த்த அனுமதி கோரியிருந்தன. அதனடிப்படையில் உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா அரசுகள் செய்த விளம்பரத்தினால், 20,000 பணியிடங்கள் இந்தியர்களால் நிரப்பப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors

CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory