» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீன உளவு கப்பலுக்கு மாலத்தீவு அனுமதி : இந்திய கடற்பகுதிகள் உஷார்!

புதன் 24, ஜனவரி 2024 12:07:21 PM (IST)சீன உளவு கப்பலுக்கு மாலத்தீவு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், இந்திய கடற்படை பகுதிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளது. 

இந்தியா-மாலத்தீவு இடையேயான உறவு சமீபத்தில் விரிசலடைந்துள்ளது. இதைப் பயன்படுத்தி சீனா மாலத்தீவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. அண்மையில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சீனா சென்றிருந்தபோது இரு நாடுகளுக்கும் இடையே 20-க்கும் மேற்பட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த நிலையில், 'சியாங் யாங் ஹாங் 3' என்ற சீன உளவுக்கப்பல் ஒன்று இந்திய பெருங்கடலில் நுழைந்துள்ளதாகவும், அது மாலத்தீவை நோக்கி நகர்ந்து வருவதாகம் தகவல் வெளியானது. இந்த நிலையில் சீன உளவு கப்பலை தங்கள் நாட்டின் துறைமுகத்தில் நிறுத்த மாலத்தீவு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பணியாளர்களின் சுழற்சி மற்றும் எரிபொருள் நிரப்புதலுக்காக மாலத்தீவு துறைமுகத்தில் தங்களது கப்பலை நிறுத்த சீனாவிடம் இருந்து தூதரக ரீதியாக கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்று சீன கப்பலை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. 

மாலத்தீவு கடற்பகுதியில் இருக்கும்போது சீன கப்பல் எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளாது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன உளவு கப்பல் மாலத்தீவு வருவதால் இந்திய கடற்படை உஷார்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory