» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஐ.நா., பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் : எலான் மஸ்க்
செவ்வாய் 23, ஜனவரி 2024 4:52:59 PM (IST)
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவிற்கு, ஐ.நா., பாதுகாப்பு சபையில் நிரந்தர இடமில்லாதது அபத்தமானது என டெஸ்லா மற்றும் எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் கூறியுள்ளார்.

செப்டம்பர் மாதம் நடக்க உள்ள ஐ.நா., உச்சி மாநாடானது, உலகளாவிய நிர்வாக சீர்திருத்தங்களை பரிசீலிப்பது மற்றும் நம்பிக்கையை மீண்டும் உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பாக இருக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்து எலான் மஸ்க் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ஐ.நா., அமைப்புகளை சீர்திருத்தம் செய்ய வேண்டும். ஆனால், அதில் உள்ள பிரச்னை என்னவென்றால், அதிக அதிகாரம் வைத்துள்ளவர்கள், அதனை விட்டு தர விரும்பவில்லை. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தாலும் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் இல்லை என்பது அபத்தமானது. ஆப்ரிக்காவுக்கும் நிரந்தரம் இடம் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு அந்த பதிவில் எலான் மஸ்க் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிராகன் விண்கலம் மூலம் 9 மாதங்களுக்குப் பிறகு பாதுகாப்பாக பூமி திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!
புதன் 19, மார்ச் 2025 10:09:07 AM (IST)

போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு மத்தியில் காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: 404 பேர் பலி
புதன் 19, மார்ச் 2025 8:38:32 AM (IST)

ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை அங்கீகரிக்க மாட்டோம்: உக்ரைன் உறுதி!
செவ்வாய் 18, மார்ச் 2025 4:43:26 PM (IST)

அமெரிக்காவை தாக்கிய சூறாவளி: 35 பேர் உயிரிழப்பு; மீட்புப்பணிகள் தீவிரம்!
திங்கள் 17, மார்ச் 2025 5:47:47 PM (IST)

கனடாவின் மார்க் கார்னியின் அமைச்சரவையில் 2 இந்திய பெண்களுக்கு வாய்ப்பு
திங்கள் 17, மார்ச் 2025 12:25:02 PM (IST)

வெற்றிகரமாக சென்றடைந்தது குரூ டிராகன்: பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்!
திங்கள் 17, மார்ச் 2025 9:02:42 AM (IST)
