» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கையில் துப்பாக்கிச்சூடு: அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் உட்பட 5பேர் பலி!

செவ்வாய் 23, ஜனவரி 2024 11:58:28 AM (IST)

இலங்கையில் அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் உட்பட 5பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கையின் தெற்கு மாகாணம் பெலியட்டா நகரில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று காலை ஜீப் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது மற்றொரு வாகனத்தில் ஜீப்பை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சிலர் ஜீப்பை வழிமறித்தனர்.  அதன் பின்னர் அந்த மர்ம நபர்கள் ஜீப்பில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். 

இதில் 5 பேரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. அவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், காயமடைந்த மற்றொருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். பட்டப்பகலில் பரபரப்பான நெடுஞ்சாலையில் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் அரசியல் கட்சடித் தலைவரான சமன் பெரேராவே என்பவர் உயிரிழந்துள்ளார். அவரை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  கூலிப்படை கும்பலை சேர்ந்தவர்களே இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.  இது தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


Thoothukudi Business Directory