» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தோனேசியாவில் திருமண கோஷ்டி சென்ற படகு கடலில் கவிழ்ந்து 30 பேர் மாயம்

சனி 23, டிசம்பர் 2023 12:24:51 PM (IST)

இந்தோனேசியாவில் திருமண கோஷ்டி சென்ற படகு கடலில் கவிழ்ந்து 30 பேர் மாயமாகினர்.

இந்தோனேசியாவில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குட்டி தீவுகள் அமைந்துள்ளன. இதனால் அங்கு அண்டை நகரங்களுக்கு செல்ல பெரும்பாலும் மக்கள் படகு போக்குவரத்தையே நம்பி உள்ளனர். அவ்வாறு செல்லும்போது படகு கவிழ்ந்து விழும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறுகின்றன. எனினும் அங்குள்ள மக்களுக்கு படகு போக்குவரத்து தவிர்க்க முடியாததாக உள்ளது.

அந்தவகையில் சுலவேசி மாகாணத்தின் போர்ட் சுமரே அருகே திருமண நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மணமக்களின் உறவினர்கள் அம்போ தீவில் இருந்து படகில் புறப்பட்டனர். மமுஜு தீவு அருகே சென்றபோது காற்று வேகமாக சுழன்று அடித்தது. இதில் மாலுமியின் கட்டுப்பாட்டை இழந்த படகு திடீரென கடலில் கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்தவர்கள் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த கடலோர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தவர்களை மீட்டு வேறு படகுகள் மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். எனினும் இந்த விபத்தில் சுமார் 30 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory