» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம்: வடகொரியா எச்சரிக்கை

வியாழன் 21, டிசம்பர் 2023 8:39:51 PM (IST)

அணுஆயுதங்களை பயன்படுத்த தயங்கமாட்டோம் என்று அமெரிக்கா- தென்கொரியாவுக்கு வடகொரியா அதிபர்  கிம் ஜாங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா- தென்கொரியா இடையிலான உறவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், இரண்டு நாடுகளின் போர் ஒத்திகை, கொரியா தீபகற்பத்தில் இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கை ஆகியவை தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக வடகொரியா நினைக்கிறது.

இதனால் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. சமீபத்தில் அணுஆயுதங்களை சுமந்து சென்று கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கி அழிக்கும் "ஹ்வாசோங்-18" ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இது மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணையாக பார்க்கப்படுகிறது. வடகொரியாவில் இருந்து அமெரிக்காவின் ஒரு பகுதியை துல்லியமாக இலக்கு நிர்ணயித்து தாக்க முடியும் எனக் கூறப்படுகிறது.

அதேவேளையில் கடந்த ஆண்டில் இருந்து வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அணுஆயுத ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவோம் என தொடர்ந்து எச்சரித்து வருகிறார். ஆனால் வடகொரியா செயல்படும் அணுசக்தி ஏவுகணைகளை பெறவில்லை. மேலும், முதலில் அணுஆயுதத்தை பயன்படுத்த வாய்ப்பில்லை. ஏனெனில், வடகொரியா அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளால் தாக்கப்பட்டிருக்கிறது என வெளிநாட்டு வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் கடந்த ஐந்து மாதங்களில் முதன்முறையாக திங்கட்கிழமை ஏவுகணை சோதனை நடத்தி, அமெரிக்கா- தென்கொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்தது.இந்த நிலையில் தூண்டப்பட்டால் எதிரிகள் மீது அணுஆயுத தாக்குதலை நடத்த தயங்கமாட்டோம் என்பதுதான் எங்களது கொள்கை என கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். மேலும், ஹ்வாசோங்-18 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதால், அதில் ஈடுபட்டவர்களை பாராட்டியுள்ளார்.

வடகொரியா கடந்த ஆண்டு அணு ஆயுதம் பயன்படுத்தும் வகையிலான சட்ட திருத்தம் கொண்டு வந்தது. அதில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைக சோதனை நடத்தியுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை அணுஆயுதங்கள் சுமந்து சென்று தாக்குதல் நடத்துபவையாகும். அணுஆயுதங்களை பயன்படுத்துவதின் முடிவு கிம் ஜாங் உன் அரசு முடிவுக்கு வருவதாக இருக்கும் என அமெரிக்கா மற்றும் தென்கொரியா தொடர்ந்து எச்கரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory