» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் உரை: கூடுதல் நிதி வழங்க கோரிக்கை!

வியாழன் 14, டிசம்பர் 2023 5:35:35 PM (IST)



அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய உக்ரைன் அதிபர், தங்கள் நாட்டிற்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா போர் தொடுத்தது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவி, பொருளாதார ரீதியாக உதவி வருகிறார்கள்.

குறிப்பாக அமெரிக்கா, இதுவரை 111 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.9 லட்சத்து 25 ஆயிரத்து 617 கோடி) வரை நிதி உதவி செய்திருக்கிறது. எனினும், ரஷியா தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தனது கட்டுப்பாட்டுக்குள் உக்ரைனை கொண்டுவர ரஷியா தீவிரம் காட்டி வருகிறது. 

இந்தநிலையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்றார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் முன்னிலையில் உரையாட விளாடிமிர் ஜெலன்ஸ்கிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய ஜெலன்ஸ்கி, "2 ஆண்டுகளாக போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 2-ம் உலக போருக்கு பின் மிக நீண்ட போரில் சுதந்திரத்திற்காக தொடர்ந்து போராடி வருகிறோம்" என்றார். 

மேலும், உக்ரைனுக்கு கூடுதல் நிதி உதவியையும் கோரினார். நாடாளுமன்றத்தில் பேசிய பிறகு, அதிபர் பைடன், சபாநாயகர் மைக் ஜான்சன் உள்பட முக்கிய எம்.பி.க்களை ஜெலன்ஸ்கி தனித்தனியே சந்தித்து பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory