» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியம்: இஸ்ரேல் பிரதமருடன் ஜோ பைடன் பேச்சு!

வெள்ளி 8, டிசம்பர் 2023 11:34:21 AM (IST)

காசாவில் தீவிரமடைந்து வரும் நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியம் என்று இஸ்ரேல் பிரதமருடன் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கி நேற்றுடன் 2 மாதங்கள் முடிவடைந்தது. இந்த போரில் இருதரப்பிலும் சுமார் 18 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். காசாவின் மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி சொந்த மண்ணிலேயே அகதிகளை போல முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

அதோடு போரின் விளைவால் உணவு, குடிநீர் போன்ற அடிப்படை தேவைகள் கிடைக்காமல் பல லட்சம் மக்கள் பரிதவிப்புக்கு ஆளாகி உள்ளனர். 7 நாட்களில் போர் இடைநிறுத்தம் முடிவுக்கு வந்தபிறகு இஸ்ரேல் ராணுவம் மீண்டும் காசாவில் தனது கோர முகத்தை காட்ட தொடங்கியது. முன்பை விட முழுவேகத்துடனும், மூர்க்கத்தனமாகவும் காசாவை இஸ்ரேல் தாக்கி வருகிறது.

இஸ்ரேலின் தற்போதைய போர் தெற்கு காசாவை சுற்றி நடந்து வருகிறது. குறிப்பாக அங்குள்ள கான் யூனிஸ் நகரம் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களால் நிலைகுலைந்து வருகிறது. இந்த சூழலில் காசாவில் தீவிரமடைந்து வரும் போரால் அங்கு மனிதாபிமான நெருக்கடி மேலும் மோசமாகி வருவதாக தன்னார்வ மற்றும் உதவி அமைப்புகள் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளன.

காசாவின் பெரிய நகரங்களைச் சுற்றி கடுமையான நகர்ப்புறப் போர் மூண்டுள்ள நிலையில், பொதுமக்களை பாதுகாப்பது "முக்கியமானது" என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தொலைபேசி தொடர்ப்பு கொண்டு கூறியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory