» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மகனுக்கு 'சந்திரசேகர்' எனப் பெயர் சூட்டிய எலான் மஸ்க்!

ஞாயிறு 5, நவம்பர் 2023 8:54:37 AM (IST)உலகப்புகழ் பெற்ற டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் தன் மகனுக்கு சந்திரசேகர் என இந்தியப் பெயரைச் சூட்டியுள்ளார். 

லண்டனில் சர்வதேச அளவில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக் கூட்டத்தில் அனைத்து நாட்டின் அறிவியல் நிபுனர்களும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த தனியார் நிறுவனங்களும், அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர். அதில் இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கலந்துகொண்டார்.  

அங்கு எலான் மஸ்க்கும் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும் பேசிக்கொண்டபோது தன் மகனது பெயரும் சந்திரசேகர் என எலான் மஸ்க் தெரிவித்ததாக அமைச்சர் தனது எக்ஸ்(X) பக்கத்தில் கூறியுள்ளார்.1987ல் நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர், விஞ்ஞானி எஸ்.சந்திரசேகர் நினைவாக எலான் மஸ்க் தன் மகனுக்கு இப்பெயரைச் சூட்டியிருப்பதாகவும் அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார். 

மேலும், அவரின் பதிவில் பின்னூட்டம் செய்திருந்த அக்குழந்தையின் தாய் ஷிவோன் சில்லிஸ், "உண்மைதான் நாங்கள் குழந்தையை செல்லமாக சேகர் என்றே அழைக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார். ஷிவோன் சில்லிஸ், எலான் மஸ்க்கின் நியூரா லின்க் (Neuralink) நிறுவனத்தின் இயக்குனராவார். 

எலான் மஸ்க்கும், ஷிவோன் சில்லிஸும் செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர். பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஆண் குழந்தைக்கு ஸ்டிரைடர் சந்திரசேகர் என்ற பெயரையும் பெண் குழந்தைக்கு அசூர் (Azure)  என்றும் பெயர் சூட்டியுள்ளனர். குழந்தைகளின் தாய் ஷிவோன் சில்லிஸின் தாயார் பஞ்சாப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital
Thoothukudi Business Directory