» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சிங்கப்பூர்- மதுரை நேரடி விமான சேவை: முதல்வர் ஸ்டாலினிடம் சிங்கப்பூர் அமைச்சர் கோரிக்கை

வியாழன் 25, மே 2023 10:38:58 AM (IST)சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை தொடங்க முதல்வர்  ஸ்டாலினிடம் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம் கோரிக்கை வைத்தார்.

புதிய முதலீடுகளை ஈர்த்திடவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பயணம் மேற்கொண்டார். சிங்கப்பூரில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்டன. அதனை தொடர்ந்து இன்று சிங்கப்பூர் உள்துறை மந்திரி சண்முகத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு மேற்கொண்டார்.

இந்த சந்திப்பின் போது சிங்கப்பூர் உள்துறை அமைச்சர், இணைய பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்துதல், உள்ளிட்டவை குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடன் கலந்துரையாடினார். மேலும், சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை தொடங்க முதல் அமைச்சரிடம் சண்முகம் கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று கூறிய முதல் அமைச்சர், சென்னையில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க சண்முகத்திற்கு அழைப்பு விடுத்தார். சிங்கப்பூர் பயணத்தை நிறைவு செய்து, இன்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் புறப்படுகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

Thoothukudi Business Directory