» செய்திகள் - விளையாட்டு » உலகம்

2ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய போயிங் விமான நிறுவனம் முடிவு!

புதன் 8, பிப்ரவரி 2023 10:50:35 AM (IST)

இந்த ஆண்டு 2ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய போயிங் விமானப் போக்குவரத்து நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகு பல்வேறு நிறுவனங்கள், செலவினங்களைக் குறைக்கும் பொருட்டு ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இது சர்வதேச அளவில் பணியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில், கூகுள், பேஸ்புக், ட்விட்டர், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்களைத் தொடர்ந்து அமெரிக்காவின் பிரபல விமானப் போக்குவரத்து நிறுவனமான போயிங் இந்த ஆண்டு 2,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. போயிங் நிறுவனத்தில் நிதி மற்றும் மனித வளங்கள் பிரிவில் பணியாற்றும் 2,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 

அதேநேரத்தில் பொறியியல் மற்றும் தயாரிப்பு துறையில் கூடுதலாக ஊழியர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேநேரத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் உற்பத்திப் பிரிவில் 15,000 பேரை வேலைக்கு அமர்த்தியதாகவும் இந்த ஆண்டு மேலும் 10 ஆயிரம் பேர் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory