» செய்திகள் - விளையாட்டு » உலகம்

துருக்கி விரைந்தது இந்திய மனிதாபிமான குழு: முதல் தவணை நிவாரணம் வழங்கல்!

செவ்வாய் 7, பிப்ரவரி 2023 3:54:11 PM (IST)நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு முதல் கட்ட நிவாரணப் பொருட்களை இந்திய அரசு அனுப்பியது. நிவாரணப் பொருட்களுடன் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மருத்துவக் குழுக்கள், மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று (பிப்.6) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமி குலுங்கியதில் நூற்றுக்கண வானுயர் கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி ஏறத்தாழ 4 ஆயிரம் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இடிபாடுகளுக்கு இடையே குவியல் குவியலாக கிடக்கும் மக்களின் சடலங்களை மீட்கும் பணியில் மீட்பு படை மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். தரைமட்டமான கட்டடங்களுக்கு இடையேப் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சரவை செயலாளர், பல்வேறு அமைச்சகம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் துருக்கிக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. நிவாரணப் பொருட்களுடன் 100 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மருத்துவக் குழுக்களை துருக்கிக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா "மருத்துவர்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை துருக்கிக்கு அனுப்ப தயார் நிலையில் உள்ளதாகவும் துருக்கியில் உள்ள இந்திய தூதரகம் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.

அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில், நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு, முதற்கட்ட நிவாரண பொருட்களை மத்திய அரசு அனுப்பி வைத்தது. இந்திய விமானப் படையின் விமானத்தில், நிவாரணப் பொருட்கள், திறமை வாய்ந்த தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த அண் மற்றும் பெண்கள், அதிக மோப்பத் திறன் கொண்ட நாய் படைகள், மருந்துப் பொருட்கள், அதிநவீன துளையிடும் இயந்திரங்கள், உள்ளிட்ட்ட பொருட்கள் விரைந்தன.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் அரிந்தம் பாக்சி, "இந்தியாவின் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் பொருட்களை துருக்கிக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்றன. தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF) மற்றும் மீட்புக் குழுக்கள், சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்ப் படைகள், மருத்துவப் பொருட்கள், துளையிடும் இயந்திரங்கள் மற்றும் பிற தேவையான உபகரணங்களுடன், நிலநடுக்க நிவாரணப் பொருட்களின் முதல் தவணை துருக்கிக்கு அனுப்பட்டுள்ளது" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital
Thoothukudi Business Directory