» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மொராக்கோவுக்கு எதிராக தோல்வி: பெல்ஜியத்தில் கால்பந்து ரசிகர்கள் வன்முறை

திங்கள் 28, நவம்பர் 2022 12:02:28 PM (IST)



உலக கோப்பை போட்டியில் தோல்வி எதிரொலியாக பெல்ஜியத்தின் கால்பந்து வன்முறையில் ஈடுபட்டனர். 

கத்தாரில் நடைபெற்று வரும் 2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் குரூப் எப் பிரிவில் நேற்று பலம் வாய்ந்த பெல்ஜியம் அணி மொராக்கோவை எதிர்க்கொண்டது. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி மொராக்கோ அபார வெற்றிபெற்றது. பெல்ஜியத்தின் தோல்வி கால்பந்து ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மொராக்காவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததால் ஆத்திரமடைந்த பெல்ஜியத்தில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பெல்ஜியம் தலைநகர் பிரெசில்சில் கால்பந்து ரசிகர்கள் மொரோக்கோ கொடியை தீவைத்து கொழுத்தினர். மேலும், கார்கள், பைக்குகளுக்கு தீ வைத்தும் ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வன்முறையில் ஈடுபட்ட ரசிகர்களை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory