» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனாவில் மின்னல் வேகத்தில் கரோனா பரவல்: ஒரே நாளில் 32,943 பேருக்கு தொற்று உறுதி!

வெள்ளி 25, நவம்பர் 2022 11:50:04 AM (IST)

சீனாவில் ரேரே நாளில் 32 ஆயிரத்து 943-க்கும் மேற்பட்டோருக்கு இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவின் உகான் நகரில் 2019 டிசம்பரில் தோன்றிய கரோனா வைரஸ் தொற்று, உலக நாடுகளையெல்லாம் பாதித்தது. நேற்று முன்தின நிலவரப்படி உலகமெங்கும் 63 கோடியே 95 லட்சத்து 78 ஆயிரத்து 239 பேரை கரோனா பாதித்துள்ளது. இந்தத் தொற்றால் 66 லட்சத்து 25 ஆயிரத்து 979 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் அதிகபட்சமாக 9 கோடியே 85 லட்சத்து 3 ஆயிரத்து 462 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அங்கு 10 லட்சத்து 78 ஆயிரத்து 929 பேர் இறந்தனர்.

இப்படி உலகை உலுக்கிய கரோனாவை இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. ஆனால் சீனாவில்தான் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. அங்கு பல நகரங்களில் பொதுமுடக்கம் இருந்தாலும் தொற்று அவ்வப்போது எழுச்சி பெற்று வருகிறது.

அந்த வகையில் ந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது.புதிதாக 32,943 பேருக்கு தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதில் 3,103 பேருக்கு அறிகுறிகள் உள்ளன. 29,840 பேருக்கு எந்தவித கரோனா அறிகுறிகளும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறப்புகள் எதுவும் இல்லை. சீனாவில் கரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வருவது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






New Shape Tailors

Arputham Hospital



Thoothukudi Business Directory