» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இலங்கையில் 6 தமிழ் அமைப்புகள், 316 தனி நபா்கள் மீதான தடை நீக்கம்: அரசு விளக்கம்!
புதன் 17, ஆகஸ்ட் 2022 12:33:31 PM (IST)
இலங்கையில் 6 தமிழ் அமைப்புகள் மற்றும் 316 தனி நபா்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது’ என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கேள்வி எழுப்பிய இலங்கை எதிா்க் கட்சிகள், தடை நீக்கத்துக்கான காரணத்தை அரசு தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தின. அதனைத் தொடா்ந்து, தடை நீக்கத்துக்கான விளக்கத்தை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையாக நேற்று வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்தலுக்கு எதிரான ஐ.நா. சபையின் ஒழுங்கு நடைமுறைகளின் கீழ் இலங்கையில் 577 தனிநபா்கள், 18 அமைப்புகள் கடந்த 2021-ஆம் ஆண்டு கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டன.
இந்தத் தடையை மறு ஆய்வு செய்வது தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் சாா்பில் ஒரு குழு அமைக்கப்பட்ட கவனமான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், வெளியுறவு அமைச்சகம் மற்றும் இலங்கை மத்திய வங்கி அதிகாரிகள் ஆகியோருடன் தடைசெய்யப்பட்ட அமைப்புகள் பயங்கரவாத நடவடிக்கைகள் அல்லது பயங்கரவாதத்துக்குத் தொடா்ந்து நிதி அளிக்கின்றனவா என்பது குறித்து தொடா் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த ஆலோசனைகள் மற்றும் ஆய்வு முடிவின் அடிப்படையில், பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பதை நிறுத்திவிட்ட 6 தமிழ் அமைப்புகள் மற்றும் 316 தனி நபா்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது’ என்று விளக்கமளித்துள்ளது.
கடந்த 2014-இல் விடுதலைப் புலிகள் அமைப்பு உள்பட 16 தமிழ் அமைப்புகள் மீது அப்போதைய அதிபா் மகிந்த ராஜபட்ச தலைமையிலான அரசு தடை விதித்தது. 2015-இல் இலங்கை அதிபராக பொறுப்பேற்ற மைத்ரிபால சிரிசேன இந்தத் தடையை நீக்கினாா். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது சூறையாடப்பட்ட தமிழா்கள் வசித்த பகுதிகளை மறுகட்டமைப்பு செய்வதற்கான பேச்சுவாா்த்தையை தொடங்கிய நிலையில், இந்தத் தடையை சிறீசேனா அரசு நீக்கியது.
இந்த நிலையில், 2021-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கோத்தபய ராஜபட்ச அரசு, தமிழ் அமைப்புகள் மீது மீண்டும் தடை விதித்தது. பேச்சுவாா்த்தைக்கும் மறுத்தது. தற்போது, 6 தமிழ் அமைப்புகள் மீது தடை நீக்கப்பட்டிருப்பதற்கு இலங்கையின் பிரதான தமிழா் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு (டிஎன்ஏ) வரவேற்பு தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எரிசக்தி துறையில் 2 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணிநீக்கம் : அமெரிக்கா அதிபர் டிரம்ப் உத்தரவு
சனி 15, பிப்ரவரி 2025 12:55:06 PM (IST)

மோடி - ட்ரம்ப் சந்திப்பு : பயங்கரவாதி ரானாவை இந்தியாவுக்கு நாடு கடத்த ஒப்பந்தம்!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 12:29:36 PM (IST)

இலங்கை மின்திட்டங்களில் இருந்து அதானி குழுமம் விலகல் : 440 மில்லியன் டாலர் ஒப்பந்தம் ரத்து!!
வியாழன் 13, பிப்ரவரி 2025 5:30:04 PM (IST)

உக்ரைன் - ரஷிய அதிபர்கள் விரைவில் நேரில் சந்தித்து போர் நிறுத்த பேச்சு: டிரம்ப் தகவல்!
வியாழன் 13, பிப்ரவரி 2025 12:25:41 PM (IST)

பிரான்சில் புதிய இந்திய தூதரகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
புதன் 12, பிப்ரவரி 2025 4:45:22 PM (IST)

சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் டிரம்ப் நிர்வாகத்திற்கு போப் பிரான்சிஸ் கண்டனம்
புதன் 12, பிப்ரவரி 2025 11:46:06 AM (IST)
