» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவில் எழுத்தாளா் சல்மான் ருஷ்டி மீது கொலை வெறி தாக்குதல்
சனி 13, ஆகஸ்ட் 2022 11:36:52 AM (IST)

அமெரிக்காவில் எழுத்தாளா் சல்மான் ருஷ்டி மீது மர்ம நபர் சராமாரியாக கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியதில் படுகாயம் அடைந்த அவர் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நியூயாா்க் மாகாணம், ஷடாக்குவாவில் நேற்று நடைபெற்ற இலக்கிய கருத்தரங்கு ஒன்றில் சல்மான் ருஷ்டி பங்கேற்றபோது, மேடையில் மா்ம நபரால் கத்தியால் தாக்கப்பட்டாா். இந்தத் தாக்குதலில் ருஷ்டி கழுத்தில் காயமடைந்தாா். அவருக்கு உடனடியாக மேடையிலேயே முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னா் அவா் ஹெலிகாப்டா் மூலம் உள்ளூா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.
மேடையில் ருஷ்டியின் அருகே இருந்த நபரும் இந்த சம்பவத்தில் காயமடைந்தாா். தாக்குதல் நடத்திய நபரை பாா்வையாளா்கள் மடக்கிப் பிடித்தனா். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், ருஷ்டியை அந்த நபர் பத்து முதல் 15 முறை கத்தியால் குத்தியதாகவும், அவர் ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்ததாகவும் கூறுகிறார்கள். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர் மார்ட்டின் ஹாஸ்கெல், அவரது காயங்கள் மோசமானவைதான் ஆனால் குணப்படுத்தக்கூடியவை என்று குறிப்பிட்டுள்ளார்.
மும்பையில் பிறந்த சல்மான் ருஷ்டி எழுதி 1988-இல் வெளியிட்ட 4ஆவது நாவல் ‘தி சடானிக் வோ்ஸஸ்’. இந்தப் புத்தகம், இஸ்ஸாமியரை புண்படச் செய்ததாக கூறி, அவருக்கு எதிராக ஈரானின் அப்போதைய தலைமை மதகுரு அயதுல்லா கொமேனி ஃபத்வா ஆணை பிறப்பித்தாா். அவரது தலைக்கு 3 மில்லியன் டாலா் விலை அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, பிரிட்டன் அரசின் பாதுகாப்பில் ருஷ்டி 9 ஆண்டு காலம் தலைமறைவு வாழ்வு வாழ்ந்து வந்தாா். சா்வதேச அரசியல் நிலவரங்கள் மாறிய நிலையில், ஃபத்வா ஆணை செயல்படுத்தப்படாது என்ற ஈரான் தெரிவித்தாலும் சல்மான் ருஷ்டிக்கு எதிரான உணா்வு தொடா்ந்து நீடித்துவருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நியூசிலாந்து பொருளாதாராத்தை மேம்படுத்த முன்னுரிமை :புதிய பிரதமர் லக்சன் உறுதி!
செவ்வாய் 28, நவம்பர் 2023 11:31:44 AM (IST)

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர்நிறுத்த ஒப்பந்த நீட்டிப்பு: அமெரிக்க அதிபர் வரவேற்பு
செவ்வாய் 28, நவம்பர் 2023 10:17:45 AM (IST)

இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி நீக்கம்: அதிபர் ரணில்உத்தரவு !
திங்கள் 27, நவம்பர் 2023 5:39:21 PM (IST)

இந்தியா, சீனா நாட்டினருக்கு விசா தேவை இல்லை - மலேசியா பிரதமர் அறிவிப்பு!
திங்கள் 27, நவம்பர் 2023 4:57:46 PM (IST)

யூத எதிர்ப்புக்கு எதிராக லண்டனில் பேரணி : இந்திய வம்சாவளியினர் ஆதரவு!
திங்கள் 27, நவம்பர் 2023 12:15:19 PM (IST)

பாகிஸ்தானில் வணிக வளாகத்தில் தீவிபத்து: 11 பேர் உயிரிழப்பு!
ஞாயிறு 26, நவம்பர் 2023 10:46:10 AM (IST)
