» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஒரே பெயரால் குழப்பம்: ரயிலில் கத்திக்குத்து சம்பவத்தில் நடிகை அந்தாரா பானர்ஜி விளக்கம்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:53:03 AM (IST)

ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) பெண் உதவி ஆய்வாளரைக் கத்தியால் குத்திய வழக்கில், தானாகப் தவறாகச் சித்தரிக்கப்பட்டதாகக் கூறி தொலைக்காட்சி நடிகை அந்தாரா பானர்ஜி விளக்கமளித்துள்ளார்.
கடந்த 12-ஆம் தேதி மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகை அந்தாரா பானர்ஜி, குஜராத் மாநிலம் சூரத்திற்கு ஆரவல்லி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். ஸ்லீப்பர் வகுப்பிற்குப் பதிவு செய்துவிட்டு ஏ.சி. வகுப்பில் பயணம் செய்ததால் ஏற்பட்ட தகராறில், RPF உதவி ஆய்வாளர் (SI) யாமினியை அந்தாரா கத்தியால் குத்தியதாகவும், அதற்காக அவர் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் பரவின.
ஒரே பெயரால் ஏற்பட்ட குழப்பம்:
இந்நிலையில், கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டது நடிகை அந்தாரா பானர்ஜி அல்ல என்பது தற்போது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் (FIR) கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் அந்தாரா சோஹம் பானர்ஜி (Antara Soham Banerjee) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரே மாதிரியான பெயரைக் கொண்டிருந்ததால் எழுந்த குழப்பத்தின் காரணமாக, நடிகை அந்தாரா கைது செய்யப்பட்டதாகத் தவறான தகவல்கள் வெளியானது உறுதியாகியுள்ளது.
நடிகை அந்தாரா பானர்ஜி அளித்த விளக்கம்:
இது குறித்து நடிகை அந்தாரா பானர்ஜி வெளியிட்ட அறிக்கையில்: "காவல்துறை எப்.ஐ.ஆர். குறித்து செய்தி வெளியிடும்போது எனது புகைப்படம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நபர் நான் அல்ல; அந்த விவகாரத்திற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
எப்.ஐ.ஆர். நகலைச் சரிபார்த்ததில், அதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர் தானேவைச் சேர்ந்த மாடலான அந்தாரா சோஹம் பானர்ஜி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் முற்றிலும் வெவ்வேறு நபர்கள். இந்தச் சம்பவத்திற்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாழும் கலை அமைப்புக்கு விதித்த ரூ. 5 கோடி அபராதம் ரத்து: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
சனி 22, ஆகஸ்ட் 2026 5:43:01 PM (IST)

ஏடிஎம்களில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூல்? - எஸ்பிஐ நிர்வாகம் விளக்கம்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:00:19 PM (IST)

காவல் நிலையத்தில் ராகுல், பிரியங்கா தர்ணா: டெல்லியில் பெரும் பரபரப்பு!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 4:36:39 PM (IST)

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட தமிழக அரசே இடத்தை தீர்மானிக்கட்டும்! - கேரள முதல்வர்
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 5:56:07 PM (IST)

கிணற்றில் கார் பாய்ந்து தம்பதி, 2 குழந்தைகள் உயிரிழப்பு: தெலுங்கானாவில் சோகம்!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:22:33 PM (IST)

கேஒய்சி புதுப்பித்தல் பெயரில் அதிகரிக்கும் சைபர் மோசடி: வாடிக்கையாளர்களுக்கு ஆர்பிஐ எச்சரிக்கை!
புதன் 19, ஆகஸ்ட் 2026 3:58:31 PM (IST)








