» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நீட் போராட்டம்: மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
செவ்வாய் 28, ஜூலை 2026 5:14:11 PM (IST)
டெல்லியில் 'நீட்' வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தர் உள்ளிட்ட நாடு முழுவதும் 'நீட்' வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின் போது, போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு மாணவர்கள் மீது தடியடி நடத்தியது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதேபோல், இப்போராட்டத்தில் காயமடைந்த காவலர்களின் குடும்பத்தினர் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுக்கள் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜூலை 28) விசாரணைக்கு வந்தன. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவுகள்: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்காகப் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது எந்தவிதக் கடுமையான நடவடிக்கையையும் காவல்துறை எடுக்கக் கூடாது.
குற்றப் பின்னணி இல்லாதவர்கள் மற்றும் கைது செய்யப்பட்ட 18 வயதிற்குட்பட்ட இளைஞர்களை உடனடியாகச் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும். கைது செய்யப்பட்ட இளைஞர்களின் விவரங்களைப் பொதுவெளியில் வெளியிடக் கூடாது. போராட்டம் நடைபெற்ற இடங்களின் சிசிடிவிகாட்சிகள் மற்றும் வீடியோ பதிவுகள் அனைத்தையும் பத்திரமாகச் சேமித்து வைக்க வேண்டும்.
விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், "வன்முறையைக் காரணம் காட்டி மாணவர்கள் மீது தடியடி நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது" எனக் குறிப்பிட்டனர்.
மேலும் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவிக்கையில், "இச்சம்பவம் குறித்து முற்றிலும் சுதந்திரமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். இதில் வரம்பு மீறி அத்துமீறிச் செயல்பட்ட அதிகாரிகள் அனைவரும் பணியில் இருந்து நீக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக மத்திய அரசுக்கும், போராட்டம் நடைபெற்ற மகாராஷ்டிரா, பீகார், உத்தரப் பிரதேசம், அசாம் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இமாசலப் பிரதேசத்தில் மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி; 11 பயணிகள் காயம்
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:35:28 AM (IST)

யூபிஐ, ரூபே கார்டு பரிவர்த்தனைக் கட்டணம்: : மக்களவையில் மசோதா நிறைவேற்றம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 5:36:51 PM (IST)

நீட் வினாத்தாளை பேராசிரியர்களே விற்றனர்: சிபிஐ குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சித் தகவல்!
சனி 8, ஆகஸ்ட் 2026 12:10:37 PM (IST)

டீப்ஃபேக் மற்றும் போலி தகவல்களை நீக்க காலக்கெடு குறைப்பு : மத்திய அரசு அதிரடி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:05:16 PM (IST)

நெசவாளர்களை ஆதரிக்கக் கைத்தறிப் பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:44:44 PM (IST)

கேஸ் சிலிண்டர் விலை ரூ.18 உயர்கிறது? - மத்திய அரசு ஆலோசனை!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 11:44:50 AM (IST)








